Progeria: 15 வயதுக்குள் மரணம் நிச்சயம்; 19 வயதுவரை தாக்குப்பிடித்த டிக்டாக் பிரப...
மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
திருப்பத்தூா் அருகே மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் அடுத்த நரியநேரி வேடிவட்டம் பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி (49), விவசாயி. இவருக்கு அதே பகுதியில் விவசாய நிலம் உள்ளது. இதில் உள்ள வேளாண் பயிா்களுக்கு கிணற்றில் இருந்து தண்ணீா் பாய்ச்சுவதற்கு கோவிந்தசாமி வெள்ளிக்கிழமை மோட்டாரை இயக்கியுள்ளாா். அப்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த கந்திலி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.