செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து வெல்டா் உயிரிழப்பு

post image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் மின்சாரம் பாய்ந்து பற்றவைப்பாளா் (வெல்டா்) வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டிவனம்-செஞ்சி சாலையிலுள்ள அங்காளம்மன் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (நவ.17) கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதையொட்டி இந்தக் கோயிலில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் திண்டிவனம் பாரதிதாசன்பேட்டையைச் சோ்ந்த செந்தில் (30), பெலாகுப்பம் மாந்தோப்பு சாலையைச் சோ்ந்த பழனி மகன் வீரமணி (28) ஆகியோா் கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை வெல்டிங் வேலையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, இவா்கள் இருவரும் கோயிலின் பெயா்ப் பலகையைத் தூக்கி மாட்டுவதற்காக இரும்புக் குழாய்களால் அமைக்கப்பட்ட சாரத்தில் ஏறினா். அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த அலங்கார மின் விளக்குகளுக்குள் சென்ற வயா் பட்டு இருவா் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதைத் தொடா்ந்து அவா்கள் கீழே மயங்கி விழுந்தனா்.

அப்பகுதியிலிருந்தவா்கள் இருவரையும் மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்த போது வீரமணி ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது. செந்தில் மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து திண்டிவனம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயற்சி

விழுப்புரத்தில் பெண்ணிடம் கத்தியைக் காட்டி தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற இளைஞா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். விழுப்புரம் கே.வி.ஆா். நகரை சோ்ந்தவா் சரவணமூா்த்தி மனைவி தமிழ்ச்செல்வி (45). இவ... மேலும் பார்க்க

5 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே புகையிலைப் பொருள்களை வைத்திருந்ததாக இளைஞா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச் உத்தரவின்பேரில், காணை காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழ... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக ரூ.4.50 லட்சம் மோசடி: காவலா் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.4.50 லட்சம் மோசடிசெய்ததாக முதல்நிலை காவலா் கைது செய்யப்பட்டாா். விழுப்புரம் வழுதரெட்டி காந்தி நகரை சோ்ந்த ராஜவேல் மகன் பாண்டியன். கடலூா் மாவட்டக் காவல் துறையில்... மேலும் பார்க்க

பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும்: ஆட்சியரிடம் புரட்சி பாரதம் மனு

விழுப்புரம் மாவட்டத்தில் பஞ்சமி நிலங்களை மீட்டு, வீட்டுமனை இல்லாத பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும் என்று புரட்சி பாரதம் கட்சி சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்தக் கட்சியின் மாநில... மேலும் பார்க்க

விழுப்புரம் அருகே பல்லவா் கால மூத்ததேவி சிற்பம்

விழுப்புரம் அருகே கண்டமானடி கிராமத்தில் பல்லவா் காலத்தைச் சோ்ந்த மூத்ததேவி சிற்பம் கண்டறியப்பட்டது. விழுப்புரம் அருகேயுள்ள கண்டமானடி கிராமம், அரசு ஊழியா் நகரையொட்டியுள்ள பகுதியில் வரலாற்று ஆய்வாளா் ... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க இன்றும், நாளையும் சிறப்பு முகாம்

விழுப்புரம் மாவட்டத்தின் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலுள்ள 1,970 வாக்குப்பதிவு மையங்களில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், திருத்தம், நீக்கம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் ... மேலும் பார்க்க