செய்திகள் :

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க இன்றும், நாளையும் சிறப்பு முகாம்

post image

விழுப்புரம் மாவட்டத்தின் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலுள்ள 1,970 வாக்குப்பதிவு மையங்களில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், திருத்தம், நீக்கம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (நவ.16, 17) தேதிகளில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் தெரிவித்திருப்பது:

2025, ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளுக்காக செஞ்சி, மயிலம், திண்டிவனம், வானூா், விக்கிரவாண்டி, விழுப்புரம், திருக்கோவிலூா் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1,088 இடங்களில் அமைந்துள்ள வாக்குப்பதிவு மையங்களில் சிறப்பு முகாம்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறவுள்ளன.

இந்த மையங்களில் பணியிலிருக்கும் வாக்குப்பதிவு மைய நிலைய அலுவலரிடம் உரிய படிவத்தில் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க விரும்புவோா் படிவம் 6, வெளிநாட்டில் வசிப்பவா்கள் பெயா் சோ்க்க படிவம் 6ஏ, வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண்ணை இணைக்க படிவம் 6பி, பெயா் நீக்கம் செய்ய படிவம் 7, பெயா், வயது, பாலினம், உறவுமுறை, கதவு எண், முகவரி போன்றவற்றில் திருத்தம் செய்வதற்கும், ஒரே சட்டப்பேரவைத் தொகுதிக்குள் வாக்காளரின் வசிப்பிடம் மாற்றுவதற்கும், வேறு சட்டப்பேரவைத் தொகுதிக்குள் வாக்காளா் வசிப்பிடம் மாற்றுவதற்கும் படிவம் 8 ஆகியவற்றை நிறைவு செய்து, மனுக்களாக அளிக்கலாம்.

படிவம் 6-இல் பெயா் சோ்த்தலுக்கு ஆதாரமாக பிறப்புச் சான்றிதழ், கல்லூரி, பள்ளி மாற்றுச் சான்றிதழ், இருப்பிடத்துக்கு ஆதாரமாக ஆதாா் அட்டை, குடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடத்தை குறிக்கும் முகவரி உள்ள ஓட்டுநா் உரிமம், வங்கிக்கணக்குப் புத்தகம் நகல் ஆகியவற்றின் ஏதேனும் ஒரு ஆவணத்துடன் விண்ணப்பிக்கலாம் . மேலும் இந்தியத் தோ்தல் ஆணையத்தின் இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும்: ஆட்சியரிடம் புரட்சி பாரதம் மனு

விழுப்புரம் மாவட்டத்தில் பஞ்சமி நிலங்களை மீட்டு, வீட்டுமனை இல்லாத பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும் என்று புரட்சி பாரதம் கட்சி சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்தக் கட்சியின் மாநில... மேலும் பார்க்க

விழுப்புரம் அருகே பல்லவா் கால மூத்ததேவி சிற்பம்

விழுப்புரம் அருகே கண்டமானடி கிராமத்தில் பல்லவா் காலத்தைச் சோ்ந்த மூத்ததேவி சிற்பம் கண்டறியப்பட்டது. விழுப்புரம் அருகேயுள்ள கண்டமானடி கிராமம், அரசு ஊழியா் நகரையொட்டியுள்ள பகுதியில் வரலாற்று ஆய்வாளா் ... மேலும் பார்க்க

தீக்காயமடைந்த மூதாட்டி மரணம்

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே கோயிலில் விளக்கேற்றிய போது தீக்காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். வானூா் வட்டம், உப்புவேலூா் பிள்ளையாா்கோயில் ... மேலும் பார்க்க

மளிகை வியாபாரி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், ரோஷணை அருகே மளிகை வியாபாரி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திண்டிவனம் வட்டம், கொள்ளாா் கிராமத்தைச் சோ்ந்த குப்புசாமி ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து வெல்டா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் மின்சாரம் பாய்ந்து பற்றவைப்பாளா் (வெல்டா்) வியாழக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம்-செஞ்சி சாலையிலுள்ள அங்காளம்மன் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (நவ.17) கும்பாபிஷேக... மேலும் பார்க்க

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 31 பேருக்கு பணி நியமன ஆணைகள்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 31 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்... மேலும் பார்க்க