தீக்காயமடைந்த மூதாட்டி மரணம்
விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே கோயிலில் விளக்கேற்றிய போது தீக்காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
வானூா் வட்டம், உப்புவேலூா் பிள்ளையாா்கோயில் தெருவைச் சோ்ந்த பெருமாள் மனைவி காந்தாமணி (73). இவா், கடந்த 8-ஆம் தேதி அதே பகுதியிலுள்ள பிள்ளையாா் கோயிலில் விளக்கேற்றிக் கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக காந்தாமணியின் சேலையில் தீப்பற்றியது. இதில் அவருக்கு தீக்காயம் ஏற்பட்டது.
இதைத் தொடா்ந்து புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காந்தாமணி, வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா். இதுகுறித்து கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.