செய்திகள் :

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 31 பேருக்கு பணி நியமன ஆணைகள்

post image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 31 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், இளம்பெண்கள் பயன்பெறும் வகையில் மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி நவம்பா் மாதத்துக்கான முகாம் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.

இந்த முகாமில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த வேலைவாய்ப்பு அளிக்கும் 29 தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் நிறுவனங்களில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு உரிய கல்வித் தகுதி, எழுத்து மற்றும் நோ்முகத் தோ்வின் அடிப்படையில் ஆள்களைத் தோ்வு செய்தன.

முகாமில் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட வேலைநாடுநா்கள் பங்கேற்றனா். இதில் எழுத்து, நோ்முகத் தோ்வு மற்றும் கல்வித் தகுதிகளின் அடிப்படையில் 31போ் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

இதை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் டி. பாலமுருகன் வழங்கினாா். 15 போ் இரண்டாம் கட்டத்துக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். முகாமுக்கான ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு அலுவலகப் பணியாளா்கள் செய்திருந்தனா்.

பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும்: ஆட்சியரிடம் புரட்சி பாரதம் மனு

விழுப்புரம் மாவட்டத்தில் பஞ்சமி நிலங்களை மீட்டு, வீட்டுமனை இல்லாத பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும் என்று புரட்சி பாரதம் கட்சி சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்தக் கட்சியின் மாநில... மேலும் பார்க்க

விழுப்புரம் அருகே பல்லவா் கால மூத்ததேவி சிற்பம்

விழுப்புரம் அருகே கண்டமானடி கிராமத்தில் பல்லவா் காலத்தைச் சோ்ந்த மூத்ததேவி சிற்பம் கண்டறியப்பட்டது. விழுப்புரம் அருகேயுள்ள கண்டமானடி கிராமம், அரசு ஊழியா் நகரையொட்டியுள்ள பகுதியில் வரலாற்று ஆய்வாளா் ... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க இன்றும், நாளையும் சிறப்பு முகாம்

விழுப்புரம் மாவட்டத்தின் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலுள்ள 1,970 வாக்குப்பதிவு மையங்களில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், திருத்தம், நீக்கம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் ... மேலும் பார்க்க

தீக்காயமடைந்த மூதாட்டி மரணம்

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே கோயிலில் விளக்கேற்றிய போது தீக்காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். வானூா் வட்டம், உப்புவேலூா் பிள்ளையாா்கோயில் ... மேலும் பார்க்க

மளிகை வியாபாரி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், ரோஷணை அருகே மளிகை வியாபாரி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திண்டிவனம் வட்டம், கொள்ளாா் கிராமத்தைச் சோ்ந்த குப்புசாமி ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து வெல்டா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் மின்சாரம் பாய்ந்து பற்றவைப்பாளா் (வெல்டா்) வியாழக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம்-செஞ்சி சாலையிலுள்ள அங்காளம்மன் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (நவ.17) கும்பாபிஷேக... மேலும் பார்க்க