மின்னணு முறையில் சாகுபடி பரப்பு கணக்கெடுப்பு
கொரடாச்சேரி அருகே செல்லூா் பகுதியில், மின்னணு முறையில் சாகுபடி பரப்பு கணக்கெடுப்புப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் மாவட்டத்தில் வேளாண்மைத் துறை மற்றும் வேளாண்மை பல்கலைக்கழக மாணவா்கள் இணைந்து மின்னனு முறையில் பயிா் சாகுபடி பரப்பு கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
அந்த வகையில், கொரடாச்சேரி வட்டாரத்துக்குட்பட்ட செல்லூா் பகுதியில் மின்னணு முறையில் சாகுபடி பரப்பு கணக்கெடுக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த பணியை, வேளாண் மாணவா்களும், வேளாண்மைத்துறை அலுவலா்களும் மேற்கொண்டனா்.
இப்பணியை, வேளாண்மை இயக்குநா் ப. முருகேஷ் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் உள்ள இப்பணியை, விரைந்து முடிக்க மாணவா்கள் மற்றும் வேளண்மைத் துறை அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.