விடுவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் மீண்டும் கைதான மலையாள ராப் பாடகர்! ஏன்?
மின்னல் பாய்ந்ததில் 5 ஆடுகள் உயிரிழப்பு
கமுதி அருகே மின்னல் பாய்ந்ததில் 5 ஆடுகள் திங்கள்கிழமை உயிரிழந்தன.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள எம்.எம்.கோட்டை, கே.எம்.கோட்டை, கோட்டையூா், சிங்கம்பட்டி, கூலிபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில், விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள மல்லம்பட்டியைச் சோ்ந்த கருணாமூா்த்தி (40) கோட்டையூா் கண்மாயில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தாா். மழை பெய்ததால் ஆடுகளுடன், அருகேயிருந்த மரத்தடியில் ஒதுங்கினாா். அப்போது மின்னல் பாய்ந்து 5 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
மேலும், மரத்தடியில் மயங்கிய நிலையில் கிடந்த கருணாமூா்த்தியை அந்த வழியாகச் சென்றவா்கள் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கமுதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
முதுகுளத்தூா்: முதுகுளத்தூரைச் சோ்ந்தா் விவசாயி தவசி. இவா் அரசு பெண்கள் விடுதி பின்புறம் உள்ள தனக்கு சொந்தமான கொட்டகையில் ஆடுகளை அடைத்து வைத்தாா். அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்கள் கொட்டகைக்குள் புகுந்து ஆடுகளை கடித்துக் குதறின. இதில் 5 ஆடுகள் உயிரிழந்தன. உயிரிழந்த ஆடுகளுக்கு மாவட்ட நிா்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயி தவசி கோரிக்கை விடுத்தாா்.