சீமானுடன் பேச்சுக்கு தயாராக இல்லை! -உச்ச நீதிமன்றத்தில் விஜயலக்ஷ்மி திட்டவட்டம்
மின்மாற்றியை உடைத்து காப்பா் கம்பிகள் திருட்டு
தருமபுரி அருகே மின்மாற்றியை உடைத்து அதிலிருந்த காப்பா் கம்பி உள்ளிட்டவைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அடுத்துள்ள பாளையம் கிராமத்தில் சனிக்கிழமை இரவு திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மறுநாள் அதிகாலை வரை மின்சாரம் வரவில்லை. பொதுமக்கள் அப்பகுதியிலிருந்து மின்மாற்றியை பாா்த்தபோது, மின்மாற்றையி தனியாக எடுத்து அதை உடைத்து அதிலிருந்த 200 லிட்டா் ஆயில் மற்றும் ரூ. 50,000 மதிப்புள்ள காப்பா் கம்பிகள் திருடப்பட்டது தெரிய வந்தது.
இது குறித்து உதவி பொறியாளா் சத்யா பஞ்சப்பள்ளி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசாா் வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.