மின்வாரிய காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வலியுறுத்தல்
மின்வாரிய காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டுமென தமிழ்நாடு மின்சார தொழிலாளா் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு மின்சார தொழிலாளா் சம்மேளனத்தின் பொதுக்குழுக் கூட்டம் தியாகராஜநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, வட்டக் கிளை தலைவா் கண்ணன் தலைமை வகித்தாா். கோட்ட செயலா் முஹம்மது இஸ்மாயில், திருநெல்வேலி வட்டச் செயலா் பெருமாள்சாமி ஆகியோா் சிறப்புரையாற்றினா். காா்த்திகேசன், பாபு உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். பதவி உயா்வுகளை காலதாமதமின்றி அறிவிக்க வேண்டும். 1-12-2023 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயா்வை தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசி விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.