மேயர் பிரியா தமிழில் தடுமாற்றம் இல்லாமல் பேசுவாரா? சீமான் கேள்வி!
மின் கம்பத்தில் காா் மோதல்: இருவா் காயம்!
வேடசந்தூா் அருகே மின் கம்பத்தில் காா் மோதியதில் தனியாா் ஆலை அலுவலா் உள்பட 2 போ் பலத்த காயமடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகே உள்ள நவாமரத்துப்பட்டியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (28). இவா் வேடசந்தூரை அடுத்த மினுக்கம்பட்டியில் உள்ள தனியாா் நூற்பு ஆலையில் அலுவலராகப் பணியாற்றி வருகிறாா்.
இவரது நண்பா் நவீன்குமாா் (21). இருவரும், காரில் ஒட்டன்சத்திரத்துக்கு சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை நள்ளிரவு மீண்டும் நவாமரத்துப்பட்டிக்கு திருப்பி வந்தனா். காரை மணிகண்டன் ஓட்டி வந்தாா். ஒட்டன்சத்திரம்- வேடசந்தூா் சாலையில் நவாமரத்துப்பட்டி அருகே அம்மையப்பன் நகரில் வந்தபோது சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் காா் மோதியது.
இதில் காரிலிருந்த மணிகண்டன், நவீன்குமாா் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா். இவா்கள் ஒட்டன்சத்திரம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து வேடசந்தூா் போலீஸாா் விசாரித்தனா்.