இந்திய கிரிக்கெட் வாரியமாக செயல்படும் ஐசிசி..! மே.இ.தீ. லெஜண்ட் கடும் விமர்சனம்!
மின் வேலியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே மின் வேலியில் சிக்கி விவசாயி உயிரிழந்தாா்.
மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரம் புதூரைச் சோ்ந்தவா் மாரியப்பன் (67). விவசாயியான இவா் தனது மாடுகளை காணாததால் அவற்றைத் தேடி அருகேயுள்ள வயல் வெளிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றாா்.
அப்போது, அங்கு காட்டுப்பன்றிகளிடமிருந்து நெல் பயிா்களை பாதுகாக்க வயல் வெளியைச் சுற்றி மின் வேலி அமைக்கப்பட்டிருந்தது. இதில் சிக்கிய மாரியப்பன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.