மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்?
நடிகர் அஜித் குமார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் குமார் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்களைத் தன் கைவசம் வைத்திருக்கிறார். இரு படங்களிலும் அவருக்கான படப்பிடிப்பு முடிந்துள்ளது.
முதலில் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது. குட் பேட் அக்லி கோடை வெளியீடாகத் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: இந்தாண்டில் அதிகம் வசூலித்த தமிழ் திரைப்படங்கள்!
அடுத்ததாக, நடிகர் அஜித் எந்த இயக்குநருடன் இணைவார் என ரசிகர்களிடம் ஆவல் எழுந்துள்ளது. இதற்கிடையே, வெங்கட் பிரபு அல்லது சிவா இருவரில் ஒருவர் ஏகே - 64 இயக்கலாம் என்கிற தகவல்களும் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், நடிகர் அஜிதுக்கு குட் பேட் அக்லி இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் பணி பிடித்ததால் அவருடன் இன்னொரு படத்தில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்ததாக மார்க் ஆண்டனி - 2 படத்தை இயக்கவுள்ளார். இது, முடித்ததும் அஜித்துடன் மீண்டும் இணைவார் எனத் தெரிகிறது.