செய்திகள் :

மீண்டும் இயக்குநராகும் எஸ். ஜே. சூர்யா!

post image

எஸ். ஜே. சூர்யா திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மற்றும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா மாநாடு திரைப்படத்தின் வெற்றிப் பின் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தன் தனித்துவமான உடல்மொழியால் தென்னிந்தியளவில் ரசிகர்களை வைத்திருப்பவருக்கு பெரிய வாய்ப்புகள் வருகின்றன.

இறுதியாக, இவர் நடிப்பில் வெளிவந்த சூர்யா சாட்டர்டேவில் நானிக்கு வில்லனாக நடித்து அசத்தியிருந்தார்.

இதையும் படிக்க: நடிப்பிலிருந்து ஓய்வு! பிரபல நடிகர் அறிவிப்பு!

தமிழில், வீர தீர சூரன், எல்ஐகே ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் கேம் சேஞ்சர் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில், வேல்ஸ் பழகலைக்கழகத்தில் எஸ். ஜே. சூர்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அப்போது, கேம் சேஞ்சர் படத்தின் வெளியீட்டிற்குப் பின், புதிய படத்தை இயக்கவுள்ளதாகவும் படத்திற்குக் கில்லர் எனப் பெயரிட்டிருப்பதையும் தெரிவித்துள்ளார்.

எஸ். ஜே. சூர்யா

இறுதியாக, கடந்த 2015 ஆம் ஆண்டு ’இசை’ படத்தை இயக்கி, நடித்திருந்தார். 10 ஆண்டுகள் கழித்து எஸ். ஜே. சூர்யா மீண்டும் இயக்குநராவது ரசிகர்களிடம் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

ஜீனி வெளியீடு எப்போது?

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் ஜீனி படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் ஜெயம் ரவி பிரதர் படத்தின் தோல்வியிலிருந்து மீள காதலிக்க நேரமில்லை படத்திற்காகக் காத்திருக்கிறார். கிரு... மேலும் பார்க்க

சில்க் ஸ்மிதா படத்தின் அறிவிப்பு விடியோ!

நடிகை சந்திரிகா ரவி நடிப்பில் உருவாகும் சில்க் ஸ்மிதா படத்தின் கிளிம்ஸ் வெளியாகியுள்ளது.தமிழ்த் திரையுலகின் துணிச்சலான பெண்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் சில்க் ஸ்மிதா. கவர்ச்சி வேஷங்களில் நடித்து மக்கள்... மேலும் பார்க்க

புஷ்பா - 2 டிக்கெட் முன்பதிவிலேயே இத்தனை கோடிகளா?

புஷ்பா - 2 திரைப்படத்திற்கு டிக்கெட் முன்பதிவு வாயிலாகக் கிடைத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா - 2 திரைப்படம் டிசம்பர்... மேலும் பார்க்க

முக்கோண காதல் கதையில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை!

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை திவ்யா கணேஷ், புதிய தொடரொன்றில் நடிக்கிறார்.சன் தொலைக்காட்சியில் இன்றுமுதல்(டிச. 2) ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடர் அன்னம். இத்தொடரில் பாக்கியலட்சுமி தொடரில் ஜெனிஃபர் பாத்திரத... மேலும் பார்க்க

பிரபல கன்னட நடிகை தற்கொலை!

பிரபல கன்னட நடிகை தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கன்னடத்தில் காலிப்பட்டா, மங்கலா கௌரி சின்னத்திரை தொடர்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் சோபிதா சிவாண்ணா (32). எரடொந்த்லா மூரு, ஜாக்பாட... மேலும் பார்க்க

நடிப்பிலிருந்து ஓய்வு! பிரபல நடிகர் அறிவிப்பு!

பிரபல பாலிவுட் நடிகர் சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.லூடேரா படத்தின் மூலம் 2013-ல் நடிகராக அறிமுகமானவர் விக்ராந்த் மாஸே. சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு, ‘லிப்ஸ்... மேலும் பார்க்க