போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டோம்; மீறினால் தக்க பதிலடி கொடுப்போம்! - இஸ்ரேல் பிர...
மீண்டும் தலைதூக்கிய கரோனா: ஏழு ஆயிரத்தை நெருங்குகிறது!
செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் நிறைவுபெற்ற 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 324 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், நாட்டில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 6,815 ஆக உயர்ந்துள்ளது.
மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, புதிதாக 324 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தில்லி, ஜார்க்கண்ட், கேரளம் என தலா ஒருவர் கரோனாவுக்கு பயாகியிருக்கறிர்கள் எனறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனாவுக்கு பலியான மூன்று பேரும், ஏற்கனவே உடல்நலப் பாதிப்புக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தவகள் என்றும் கூறப்படுகிறது.
நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது சுகாதார நிபுணர்களுக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் இணை நோய் உள்ளவர்களின் இறப்புகளும் மக்களுக்கு அச்சத்தை உருவாக்கியிருக்கிறது.
தில்லியில் 90 வயது பெண்மணி சிறுநீரகம் பாதித்து தீவிர சிகிச்சையில் இருந்து வந்ததாகவும், அவரது இறப்புக்கு கரோனா காரணமில்லை என்றும், அவர் உடல்நலக் குறைவால்தான் உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர்.
ஜார்க்கண்டிலும் 44 வயது நபர், அதிக ரத்த அழுத்தம் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் பலியானதாகவும் கேரளத்தில் 79 வயது நபர் கரோனாவும் பாதித்து, உடல் உறுப்புகள் செயலிழந்தநிலையில்தான் பலியானதாகவும் கூறப்படுகிறது. இவருக்கு ஏற்கனவே பல உடல்நலப் பிரச்னைகள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
முதியவர்கள், கர்ப்பிணிகள், நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் முகக்கவசம் அறிந்துகொள்ளுமாறு மருத்துவ நிபுணர்கள் அறிவுரை வழங்குகிறார்கள். அச்சப்பட வேண்டாம், ஆனால் எச்சரிக்கையுடன் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.