போர்ப்பதற்றம்: பதுங்குமிடங்களைச் சீரமைக்க அரசுக்கு எல்லையோர கிராமங்கள் கோரிக்கை!
மீண்டும் ரூ. 100 கோடி பட்டியலில் இணைந்த நானி!
நடிகர் நானியின் ஹிட் - 3 திரைப்படம் ரூ. 100 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் நானி நடிப்பில் மே. 1 ஆம் தேதி வெளியான ஹிட் - 3 திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இயக்குநர் சைலேஜ் கொலனு இயக்கத்தில் முன்னதாக வெளியான ஹிட் லிஸ்ட், ஹிட் லிஸ்ட் - 2 ஆகிய படங்களுக்குக் கிடைத்த ஆதரவால் ஹிட் லிஸ்ட் - 3 உருவானது.
தற்போது, இப்படம் உலகளவில் ரூ. 101 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படத்திற்கு முன் நானி நடித்த சரிபோத சனிவாரம் திரைப்படமும் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்து அசத்தியிருந்த நிலையில் தொடர்ச்சியாக அடுத்தடுத்த இரண்டு ரூ. 100 கோடி படங்களைக் கொடுத்த நடிகர் பட்டியலில் நானி இணைந்துள்ளார்.
இதையும் படிக்க: தீபாவளி வெளியீடாக சூர்யா - 45?