செய்திகள் :

மீனவர்களின் வலியைப் பேசும் கட்டுமரக்காரன் பாடல்!

post image

நடிகர் விக்னேஷ் ரவி நடித்த கட்டுமரக்காரன் பாடல் கவனம் பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் அதிக வெற்றிப் படங்களைக் கொடுத்த வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது.

தற்போது, திரைப்படத் தயாரிப்பைத் தாண்டி ஆல்பம் பாடல்களிலும் கவனம் செலுத்த ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அதன் முதல் பாடலாக நடிகர் கேகேவின் கனவே மற்றும் அசோக் செல்வன் - மிர்னா நடித்த ’18 மைல்ஸ்’ ஆகிய பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன.

இந்த நிலையில், மீனவர்களின் வலிகளைப் பேசும் கட்டுமரக்காரன் என்கிற புதிய பாடலை வெளியிட்டுள்ளனர். இதில், நடிகர் விக்னேஷ் ரவி முன்னணியாக நடிக்க, விபின் பாஸ்கர் இசையமைப்பில் பாடகர் அறிவு பாடியுள்ளார்.

தன சேகர் நாராயணன் இயக்கத்தில் உருவான இப்பாடல் யூடுயூபில் 10 லட்சம் பார்வைகளையும் கடந்துள்ளது.

ஒரு நாயகன், இரு மனைவி... திருமாங்கல்யம் தொடரின் புதிய முன்னோட்ட விடியோ!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திருமாங்கல்யம் தொடர் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இத்தொடரில் காயூ ஸ்ரீ, மேகா சல்மான் ஆகியோர் நாயகிகளாகவும், பிரித்விராஜ் நாயகனாகவும் நடிக்கவுள்ளனர்.மேகா சல்மான் கேரளத்தில் சில... மேலும் பார்க்க

நடிகை அம்பிகா, ஜோவிகா பங்கேற்கும் சமையல் எக்ஸ்பிரஸ் -2!

சமையல் எக்ஸ்பிரஸ் -2 நிகழ்ச்சியில் நடிகை அம்பிகா மற்றும் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா ஆகியோர் போட்டியாளர்களாகப் பங்கேற்கவுள்ளனர். நடிகை சுஜிதா மற்றும் ஷாலின் ஸோயா ஆகியோர் தொகுத்து வழங்கும் இந்த நிகழ... மேலும் பார்க்க

38,000 பாடல்கள்... பாடகரின் மறைவால் ஸ்தம்பித்த அசாம்!

பாடகர் ஸுபீன் கார்க் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடம் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.அசாம் திரையுலகில் முன்னணி பாடகராகத் திகழ்ந்தவர் ஸுபீன் கார்க் (52). அசாமி, ஹிந்தி மற்றும் வங்காளம் உள்பட பல மொழிக... மேலும் பார்க்க

வைரலாகும் ஆஹா கல்யாணம் தொடரின் நிறைவு நாள் புகைப்படங்கள்!

ஆஹா கல்யாணம் தொடரின் நிறைவு நாளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் ஆஹா கல்யாணம். இத்தொடரில... மேலும் பார்க்க

பிரம்ம ராட்சசன்... காந்தாரா சேப்டர் 1 டிரைலர்!

காந்தாரா சேப்டர் - 1 திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படமான காந்தாரா சேப்டர் 1, கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளுக்கு முன் நடைபெறும் கதையாக எடுக்கப்பட்... மேலும் பார்க்க

ஓடிடியில் லோகா எப்போது? துல்கர் சல்மான் அப்டேட்!

லோகா படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக, முக்கிய அறிவிப்பை நடிகர் துல்கான் சல்மான் வெளியிட்டுள்ளார்.மலையாளத்தில் ஓணம் திருவிழாவையொட்டி திரைக்கு வந்த 'லோகா சேப்டர் - 1 சந்திரா' திரைப்படம் மலையாளம் மட்டும... மேலும் பார்க்க