செய்திகள் :

மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

post image

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ராமேஸ்வரத்திலிருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், 17 மீனவர்கள் எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்குமாறு கோரியும், மீனவர்கள் மீது தாக்குதல்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்கவும் உரிய தூதரக நடவடிக்கைகளை எடுக்குமாறும் வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு இன்று (24-12-2024) கடிதம் எழுதியுள்ளார்.  

அக்கடிதத்தில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 17 மீனவர்கள் IND-TN-10-MM-206 மற்றும் IND-TN-10-MM-543 ஆகிய பதிவெண்கள் கொண்ட இரண்டு இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், இலங்கைக் கடற்படையினரால் 24.12.2024 அன்று சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அக்கடிதத்தில், 20.12.2024 அன்று இலங்கையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத ஆறு நபர்களால், நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரை கிராமத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட இருவேறு சம்பவங்களையும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ள முதலமைச்சர், இந்த மூர்க்கத்தனமான தாக்குதலில், இரண்டு நாட்டுப் படகுகளில் பயணித்த ஆறு மீனவர்களில், மூன்று மீனவர்கள் காயமடைந்துள்ளனர், இந்தத் தாக்குதலின்போது, மீனவர்களது மீன்பிடிப் படகுகளில் இருந்த ஜிபிஎஸ் கருவிகள், விஹெச்எப் கருவிகள், மீன்பிடி வலை, கையடக்கத் தொலைபேசி மற்றும் அவர்கள் பிடித்த மீன்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்று அடிக்கடி நடக்கும் கைது மற்றும் தாக்குதல் சம்பவங்கள், பாரம்பரிய கடற்பரப்பில் மீன்பிடிக்கும் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் மீனவர்களின் வாழ்க்கையில் நிச்சயமற்ற தன்மையையும், ஆபத்தையும் ஏற்படுத்துவதாக கவலையோடு குறிப்பிட்டுள்ள அவர், 2024 ஆம் ஆண்டில் மட்டும் 530 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 71 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அண்மைக்காலமாக நடைபெற்று வரும் இத்தகைய சம்பவங்களும், தாக்குதல்களும் மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பி வாழும் மீனவ மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளதாகக் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

எனவே, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், எதிர்காலத்தில் தமிழக மீனவர்கள் மீது இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாமல் இருக்கவும் உரிய தூதரக நடவடிக்கைகளை எடுக்குமாறும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கரை முதல்வர் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.  

அமித் ஷா தமிழகம் வருகை ஒத்திவைப்பு?

மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழகப் பயணம் ஒத்திவைக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டிச. 27ஆம் தேதி அமித் ஷா தமிழகம் வருவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவரின் பயணம் ஒத்திவைக்கப்படலாம் என... மேலும் பார்க்க

மகனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகன் குகேஷுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.சின்ன திரையிலிருந்து வந்த சிவகார்த்திகேயன் வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். சமீபத்தில் சிவகார்த்... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு: தமிழக அரசுக்கு விஜய் வலியுறுத்தல்!

அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரி மாணவி பாலியல் வன்முறை வழக்கு தொடர்பாக விரைவான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனத் தமிழக அரசை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

கர்நாடக மாநிலம் ஆவேரி மாவட்டத்தில் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர்.ஆவேரி மாவட்டத்தில் ஆவேரி-தர்வாட் நெடுஞ்சாலையில் ஹூபபள்ளி நோக்கி ஒரே குடும்பதைச் சேர்ந்த 4 பேர் தங்களத... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. பாலியல் புகார்: காவல் துறை விளக்கம்!

அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்முறை நடந்ததாகக் கூறப்படும் புகார் தொடர்பாக காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வர... மேலும் பார்க்க

பல்கலைகழக வளாகத்தினுள் புகுந்த சிறுத்தைக் குட்டி!

மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் தாயைப் பிரிந்து பல்கலைகழக வளாகத்தினுள் புகுந்த சிறுத்தைக் குட்டி வனத்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டது.அமராவதி மாவட்டத்திலுள்ள செயின்ட் காட்ஜ் பாபா அமராவதி பல்கலைக்கழகத்தி... மேலும் பார்க்க