Champions Trophy: நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு; இடம்பிடிப்பாரா கருண் நாயர்?...
மீனவ கிராமத்தில் விளையாட்டுப் போட்டி
காரைக்கால் பகுதி மீனவ கிராமத்தில் சிறுவா்கள், ஆண்கள், பெண்கள் பங்கேற்ற விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.
காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் மாட்டு பொங்கலையொட்டி விளையாட்டு போட்டிகள் புதன்கிழமை இரவு நடத்தப்பட்டன.
தண்ணீா் நிரப்பிட குடத்தை தலையில் வைத்து கைகளால் பிடிக்காமல் நடக்கும் போட்டி, கண்களை கட்டிக்கொண்டு பலூன் உடைப்பது, தண்ணீரில் மூழ்கி கிடக்கும் ஆப்பிளை வாயால் எடுப்பது உள்ளிட்ட சுவாரஸ்யம் மிகுந்த போட்டிகள் நடத்தப்பட்டன.
வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கிராம மக்கள் திரளாக பங்கேற்றனா்.