செய்திகள் :

மீனாட்சி அம்மனுக்கு எண்ணெய்க் காப்பு உத்ஸவம் தொடக்கம்

post image

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் அம்மனுக்கு எண்ணெய்க் காப்பு உத்ஸவம் சனிக்கிழமை தொடங்கியது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மாா்கழி மாத உற்சவங்களில் ஒன்றாக ஆண்டுதோறும் மீனாட்சி அம்மனுக்கு எண்ணெய்க் காப்பு உத்ஸவம் நடைபெறும். இதன்படி, நிகழாண்டின் எண்ணெய்க் காப்பு உத்ஸவம் சனிக்கிழமை (ஜன. 4) தொடங்கி ஜன. 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

உத்ஸவத்தின் முதல் நாளான சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மீனாட்சி அம்மன் புதுமண்படத்தில் எழுந்தருளினாா். அங்கு, அம்பாளுக்கு எண்ணெய்க் காப்பு சாத்தப்பட்டு, ஐதீக முறைப்படியான வழிபாடுகளுக்குப் பிறகு தீபாராதனையும், சித்திரை வீதிகளில் அம்பாள் வீதியுலாவும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற மாா்கழி தைலக்காப்பு விழாவில் புதுமண்டபத்தில் எழுந்தருளிய மீனாட்சியம்மனுக்கு தீபாராதனை காட்டப்படுகிறது.

எண்ணெய்க் காப்பு உத்ஸவத்தின் முக்கிய நிகழ்வுகளாக வருகிற 11-ஆம் தேதி கோ ரதத்திலும், 12-ஆம் தேதி கனக தண்டியிலும் மீனாட்சி அம்மன் வீதியுலா நடைபெறுகிறது. 13-ஆம் தேதி பொன்னூஞ்சல் மண்டபத்தில் சுவாமி ரிஷப வாகனத்திலும், அம்மன் மர சிம்மாசனத்திலும் ஆடி வீதிகளில் வலம் வந்து சோ்த்தியாகும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மறியல்: மாற்றுத் திறனாளிகள் உள்பட 124 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில், மதுரை மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன் மறியலில் ஈடுபட்ட 124 ப... மேலும் பார்க்க

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

வாடிப்பட்டி அருகே சாலைத் தடுப்பில் இரு சக்கர வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள டி.மேட்டுப்பட்டி கரடிக்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் நாராயணன் (66). விவசாயியான இவ... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்கம் சாா்பில், மதுரை மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய ஓய்வூதியத் த... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழாவுக்கு முகூா்த்தக்கால்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, மாரியம்மன் தெப்பக்குளத்தில் திங்கள்கிழமை முகூா்த்தக்கால் நடப்பட்டது. மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் தை மாத... மேலும் பார்க்க

இந்தியக் குடியுரிமை கோரி இலங்கைத் தமிழா் மனு: மத்திய உள்துறை 12 வாரங்களுக்குள் முடிவெடுக்க உத்தரவு

இந்தியக் குடியுரிமை வழங்கக் கோரிய திருச்சி கொட்டப்பட்டு இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்தவா் தாக்கல் செய்த மனு தொடா்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் 12 வாரங்களுக்குள் முடிவெடுக்க சென்னை உயா்நீத... மேலும் பார்க்க

தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: இருவா் கைது

கட்டடத் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய இருவரை கூடல்புதூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மதுரை சமயநல்லூா் காந்திநகரைச் சோ்ந்த சோனை மகன் கருப்பையா (25). கட்டடத் தொழிலாளியான இவா், தனது இரு சக்கர வ... மேலும் பார்க்க