செய்திகள் :

மீனாட்சி பொறியியல் கல்லூரி: 124 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல் நிகழ்ச்சி

post image

மீனாட்சி பொறியியல் கல்லூரி, 25-08-2025 அன்று 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான பி.இ/பி.டெக்/பி.ஆர்க்/,எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ முதலாம் ஆண்டு மாணவர்களுக்களின் புதுமுக வரவேற்பு நிகழ்ச்சியை உற்சாகத்துடன் சிறப்பாக நடத்தியது.

விழாவானது, தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் குத்துவிளக்கேற்றுதலுடன் இனிதே ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.ஆனந்தக் குமார் வரவேற்புரை வழங்கினார்.

மீனாட்சி பொறியியல் கல்லூரி
மீனாட்சி பொறியியல் கல்லூரி

விழாவில் நிறுவனத் தலைவர் டாக்டர் ஜி.ரா.கோகுல் அவர்களும், செயல் இயக்குநர் என். இரெங்கராஜன் அவர்களும், தலைமை சிறப்புரையாளர்           திரு. சார்லஸ் காட்வின் அவர்களும், சிறப்பு விருந்தினர்  திரு. கணேஷ் வெங்கட்ராமன் அவர்களும் பங்கேற்றனர். மேலும், கல்லூரி முதல்வர், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

தலைமையுரையில், டாக்டர். ஜி. ரா. கோகுல் அவர்கள், மாணவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், ஒழுக்கம், புதுமை மற்றும் கல்லூரியின் முழுமையான வளர்ச்சி குறித்தும் எடுத்துரைத்தார்.

மேலும் மாணவர்கள் சிறந்த தொழில் முனைவோராகவும், சிறப்பான குடிமக்களாகவும் வளர்வதற்காக நிறுவனம் தொடர்ந்து ஆதரவு அளிக்கும்  எனவும் உறுதியளித்தார். இந்நிகழ்ச்சியில் கல்வி சார்ந்த ஒழுங்குமுறை மாணவர் ஆதரவு அமைப்புகள் மற்றும் பாட செயல்பாடுகள் பற்றிய அறிமுகமும் வழங்கப்பட்டது.

மீனாட்சி பொறியியல் கல்லூரி
மீனாட்சி பொறியியல் கல்லூரி

இந்நாளின் சிறப்பம்சமாக Rs.75,55,000/- மதிப்பில் கல்வி உதவித்தொகைகள் பி.இ./பி.டெக்/பி.ஆர்க்/எம்.பி.ஏ./எம்.சி.ஏ பயிலும் 124 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

மீனாட்சி அம்மாள் அறக்கட்டளையின் இந்தத் தாராளமான முயற்சி, தரமானக் கல்வியை மேம்படுத்தும் உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. கல்வியில் சிறந்து விளங்குவதற்கான, கல்லூரியின் தொலைநோக்குப் பார்வையைப் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

‘எந்த மாணவருக்கும் இதுவரை நான் ஜீரோ மார்க் போட்டதே இல்லை’ - நல்லாசிரியர் கவிதா!

ரஷ்யா வரை...சென்னையின் பரபரப்பான புழல் காந்தி சாலையில் இயங்கிக்கொண்டிருக்கும் சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியின் மாணவர்கள் ரஷ்யா வரை சென்று படித்திருக்கின்றனர் என்பதை கேள்விப்பட்டு அதற்கு காரணமான அப... மேலும் பார்க்க

தர்மபுரி: பள்ளி மாணவர்களை கை, கால்களை அமுக்கச் சொன்ன தலைமை ஆசிரியர்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மாவேரிப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் அக்கிராமத்தைச் சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள... மேலும் பார்க்க

"4 குழந்தைகள் இருந்தாலும், ஒரு பள்ளியைக் கட்டி ஆசிரியரை நியமிப்போம்" - அண்ணாமலைக்கு அமைச்சர் பதில்

சேர்க்கை குறைவு என அண்ணாமலை பழைய தரவுகளை வைத்துக் குற்றச்சாட்டு வைத்துள்ளார் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.பள்ளி விழாவில்மதுரை சத்திரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்... மேலும் பார்க்க

ராமோன் மகசேசே விருது: சமூக சேவைக்கான விருதைப் பெறும் NGO; Educate Girls அமைப்பின் சாதனைகள் என்னென்ன?

ஆசியாவின் மிக உயரிய குடிமைப்பணி மற்றும் சமூக சேவைக்கான விருதாகக் கருதப்படும் ராமோன் மகசேசே விருதைப் பெறும் முதல் இந்திய NGO என்ற பெருமையைப் பெற்றுள்ளது 'Educate Girls' என்ற அமைப்பு. இது தொலைதூர கிராமங... மேலும் பார்க்க

'தமிழகத்துக்கு கல்வி நிதி வழங்க வேண்டும்!' - 2வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் சசிகாந்த் செந்தில்

SSA ( Sarva Shiksha Abhiyan) திட்டத்தில் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை விடுவிக்க வலியுறுத்தி திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் இரண்டாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு இருக்கிறா... மேலும் பார்க்க