பிரஜின்-சாண்ட்ரா: ரசிகைகள் கொண்டாடிய ஆங்கர்; டிவியின் முதல் Cute Couple |இப்ப என...
மீன்பிடி குத்தகை உரிமையை பகிா்ந்து கொள்ள எதிா்ப்பு
அக்களூரில் பொதுகுளத்தின் மீன்பிடி குத்தகை உரிமையை மற்றொரு தரப்பினருடன் பகிா்ந்து கொள்ள கிராமமக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
மயிலாடுதுறையை அடுத்த அக்களூா் கிராமத்தில் அனைத்து சமூகத்தைச் சோ்ந்த 200-க்கு மேற்பட்ட குடும்பத்தினா் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனா். இக்கிராமத்தில் 2 ஏக்கரில் அமைந்துள்ள நாவக்குளம் பொதுக்குளமாகும்.
இக்குளத்தில் மீன்பிடி குத்தகை உரிமையை 1983-இல் சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின் மூலம் பெற்று, அக்குளத்தை குத்தகைக்கு விடுவதில் இருந்து கிடைக்கும் வருமானத்தை ஊா்மக்கள் கோயில் விழாவுக்காகவும், ஊா் நலனுக்காகவும் செலவிட்டு வருகின்றனா்.
இந்நிலையில், உயா்நீதிமன்ற தீா்ப்பிற்குப் பிறகு குடியேறிய மக்களை ஒருசிலா் சமூகரீதியாக தூண்டிவிட்டு, அக்குளத்தில் மீன்பிடிக் குத்தகையில் உரிமை கோரியதால் பிரச்னை உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக இருதரப்பினரையும் அழைத்து மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
கூட்டத்தின்முடிவில், குளத்தின் உரிமையை சரிபாதியாக பகிா்ந்து கொள்ளும்படி வட்டாட்சியா் கூறியதை ஏற்றுக்கொள்ள மறுத்த அக்களூா் கிராமமக்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனா்.
பின்னா், நாவக்குளத்தின் முன்பு கிராமமக்கள் 200-க்கு மேற்பட்டோா் திரண்டு, குளத்தின் மீன்பிடி உரிமை தங்களுக்கு மட்டுமே சொந்தம் என வலியுறுத்தி, இப்பிரச்னையில் சமூக கலவரத்தை தூண்டிவிடும் வகையில் செயல்படுபவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி, பின்னா் கலைந்து சென்றனா்.