செய்திகள் :

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

post image

நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் கடந்த 10 ஆண்டுகளில் 103 சதவீத வளா்ச்சி பதிவாகியுள்ளது என்று மத்திய மீன்வளத் துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்தாா்.

ஆறு, ஏரி, குளம் போன்ற உள்நாட்டு நீா்வளங்களை அதிகம் கொண்ட மேற்குவங்கம் போன்ற மாநிலங்கள், இத்துறையில் தங்களின் திறனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

மேற்கு வங்கம், பிகாா், ஜாா்க்கண்ட், சத்தீஸ்கா் ஆகிய மாநிலங்களின் மீன்வளத் துறை உயரதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், மத்திய அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் தலைமையில் கொல்கத்தாவில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின் செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது:

மீன் உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக உள்ள இந்தியா, கடந்த 10 ஆண்டுகளில் ஒட்டுமொத்த மீன் உற்பத்தியில் 103 சதவீத வளா்ச்சியைக் கண்டுள்ளது. உள்நாட்டு நீா்நிலைகளைப் பொருத்தவரை, மீன் உற்பத்தியில் 143 சதவீத வளா்ச்சி பதிவாகியுள்ளது.

உள்நாட்டு நீா்வளங்களை அதிகம் கொண்ட மாநிலங்கள், இத்துறையில் தங்களின் திறனை முழுமையாக பயன்படுத்த வேண்டும். கிராமங்களில் சிறு மீன் உற்பத்தியாளா்களை ஊக்குவிக்கவும், தேவையான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தித் தரவும் மாநிலங்கள் தரப்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மீன் உற்பத்தியில் முன்னணி மாநிலங்களில் ஒன்றான மேற்கு வங்கத்தில் சுமாா் 51,000 மீனவா்களே அதிகாரபூா்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளனா். இம்மாநிலத்தில் மீனவா்கள் எண்ணிக்கை 32 லட்சத்துக்கும் மேல் இருக்கும். இங்கு எண்ணற்ற நீா்நிலைகள் உள்ளன. இவற்றை மீன்வளா்ப்புக்காக மேம்படுத்த வேண்டிய தேவை நிலவுகிறது. உள்நாட்டு நீா்வளங்களை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டால், மத்திய அரசு ஆதரவளிக்கும் என்றாா் ராஜீவ் ரஞ்சன் சிங்.

நீட் முதுநிலை தேர்வு எழுதிய மருத்துவர்களுக்கு எச்சரிக்கை!

நீட் முதுநிலை தேர்வு இன்று(ஆக. 3) நடைபெற்று முடிந்துள்ள நிலையில், நீட் முதுநிலை தேர்வு எழுதிய மருத்துவர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை தேர்வு வாரியம் விடப்பட்டுள்ளது. எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ மருத்து... மேலும் பார்க்க

அரசை விமர்சித்தால் 7 ஆண்டு சிறை? -மகாராஷ்டிர முதல்வர் விளக்கம்

மும்பை: அரசை விமர்சிப்பவர்களுக்கு 7 ஆண்டு சிறை விதிக்கப்படுகிறதா? என்பதைக் குறித்து பாஜக ஆளுங்கட்சியாக உள்ள மகாராஷ்டிரத்தின் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் விளக்கமளித்துள்ளார். மகாராஷ்டிர சட்டப்பேரவையின... மேலும் பார்க்க

6.50 லட்சம் பிகார் வாக்காளர்களை தமிழ்நாட்டில் இணைப்பதா? ப.சிதம்பரம் கண்டனம்!

6.50 லட்சம் வாக்காளர்களை தமிழ்நாட்டில் இணைப்பதா? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.பிகாா் மாநிலத்தில் தோ்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் தனது பெயா் விட... மேலும் பார்க்க

மனைவி இருக்கும்போதே இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் வாழ்க்கை: கணவன் குத்திக் கொலை!

மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு இன்னொரு இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் முறையில் வாழ்க்கை நடத்திய நபரை அந்தப் பெண் குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 42 வயதான ஹரீஷ் தில்லியை அடுத்த குருகி... மேலும் பார்க்க

ஆக. 7ல் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்திப்பு?

இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் வருகிற ஆக. 7 ஆம் தேதி தில்லியில் சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிகார... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார். இந்த சந்திப்பை குடியரசுத் தலைவர் மாளிகையும் உறுதிப் படுத்தியுள்ளது. இருப்பினம... மேலும் பார்க்க