Vaibhav Suryavanshi : 'அந்தொருவன் வந்துருக்கான்டே!' - IPL -ஐ அதிரவைத்த 14 வயது ச...
மீன் பிடிக்கச் சென்றவா் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
பெரம்பலூா் தெப்பக்குளத்தில் மீன் பிடிக்கச் சென்றவா் குளத்தில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
பெரம்பலூா் புதிய மதனகோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முத்துசாமி மகன் மோகன்(60). இவா், ஞாயிற்றுக்கிழமை பெரம்பலூா் தெப்பக்குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாரதவிதமாக குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தகவலறிந்த பெரம்பலூா் நிலைய தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் நிகழ்விடத்துக்குச் சென்று மோகன் உடலை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.