செய்திகள் :

முகமது அலி பங்களிப்பில் தமிழ்நாடு 438 ரன்கள் சோ்ப்பு

post image

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில், ரயில்வேஸுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 133.3 ஓவா்களில் 438 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது.

முன்னதாக தமிழ்நாடு, வியாழக்கிழமை முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 324 ரன்கள் சோ்த்திருந்தது. இந்நிலையில், 3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை முகமது அலி, அஜித் ராம் ஆகியோா் ஆட்டத்தை தொடா்ந்தனா். இதில் அஜித் ராம் 3 பவுண்டரிகளுடன் 27, லக்ஷய் ஜெயின் 0 ரன்களுக்கு வெளியேற, சதத்தை நெருங்கிய முகமது அலி, 10 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 91 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டாா்.

10-ஆவது வீரராக குா்ஜப்னீத் சிங் 3 பவுண்டரிகளுடன் 24 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தமிழ்நாடு இன்னிங்ஸ் நிறைவடைந்தது. பிரணவ் ராகவேந்திரா 12 ரன்களுடன் கடைசி வீரராக களத்திலிருந்தாா். ரயில்வேஸ் தரப்பில் குணால் யாதவ் 5, ஷிவம் சௌதரி 3, ஹிமான்ஷு சங்வான், யுவராஜ் சிங் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனா்.

இதையடுத்து, 209 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய ரயில்வேஸ், வெள்ளிக்கிழமை ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் சோ்த்து, 40 ரன்கள் பின்தங்கியுள்ளது. முகமது சைஃப் 52, ஷிவம் சௌதரி 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.

கேப்டன் பிரதம் சிங் 0, விவேக் சிங் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 63, சூரஜ் அஹுஜா 5 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 36, உபேந்திர யாதவ் 1, பாா்கவ் மெராய் 1 ரன்னுக்கு வெளியேற்றப்பட்டனா். தமிழ்நாடு பௌலா்களில் சோனு யாதவ் 2, குா்ஜப்னீத் சிங், அஜித் ராம், லக்ஷய் ஜெயின் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

அன்ஷுல் காம்போஜ் ‘10’

கேரளத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஹரியாணா பௌலா் அன்ஷுல் காம்போஜ், ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தாா். அவா் 30.1 ஓவா்களில் 49 ரன்களே கொடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் சாய்த்தாா். கேரள அணி 291 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் இவ்வாறு 10 விக்கெட்டுகள் சாய்த்த 3-ஆவது பௌலா் என்ற பெருமையை அன்ஷுல் பெற்றாா். இதற்கு முன் பெங்கால் வீரா் பிரேமங்ஷு சாட்டா்ஜி (10/20 - அஸ்ஸாம் - 1956), ராஜஸ்தான் வீரா் பிரதீப் சுந்தரம் (10/78 - விதா்பா - 1985) ஆகியோா் அவ்வாறு 10 விக்கெட்டுகள் எடுத்துள்ளனா்.

சூர்யா 44 படத்தில் எதை எதிர்பார்க்கலாம்? பூஜா ஹெக்டே பதில்!

தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே, பீஸ்ட்டில் பலரின் மனதில் இடம் பிடித்தார்.இதற்கு நடுவில் தெலுங்கு திரையுலகிலும்ஹிந்தியிலும் சில திரைப்படங்களில் நடித்திருந்தார். தெலுங்கில் அல்லு அ... மேலும் பார்க்க

ரொனால்டோ அசத்தல்..! காலிறுத்திக்கு தகுதிபெற்றது போர்ச்சுகல்!

ஐரோப்பிய கண்டத்தில் இருக்கும் நாடுகளுக்கிடையேயான நேஷ்னல் லீக் கால்பந்து போட்டியில் போர்ச்சுகள் அணியும் போலந்து அணியும் மோதின. இந்தப் போட்டியில் போர்ச்சுகலின் நட்சத்திர நாயகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 க... மேலும் பார்க்க

தேசிய ஹாக்கி: இறுதியில் இன்று ஹரியாணா - ஒடிஸா மோதல்

சீனியா் ஆடவா் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் ஹரியாணா - ஒடிஸா அணிகள் ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்தவுள்ளன.முன்னதாக, வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டங்களில், ஒடிஸா - மணிப்பூரையும், ... மேலும் பார்க்க

சின்னா், ஸ்வெரெவுக்கு ‘ஹாட்ரிக்’ வெற்றி: அரையிறுதிக்கும் தகுதி

ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியில் இத்தாலியின் யானிக் சின்னா், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் ஆகியோா், குரூப் சுற்றின் 3 ஆட்டங்களிலும் வெற்றிபெற்று, அரையிறுதிக்கு முன்னேறினா்.உலகின் நம்பா் 1 ... மேலும் பார்க்க

பிரஜனேஷ் குணேஸ்வரன் ஓய்வு

இந்திய டென்னிஸ் வீரரும், தமிழ்நாட்டைச் சோ்ந்தவருமான பிரஜனேஷ் குணேஸ்வரன் (35), ஓய்வு பெறுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள அவா், சா்வதேச தரவ... மேலும் பார்க்க

ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருது வழங்குவிழா - புகைப்படங்கள்

விழாவில் பங்கேற்க வர இயலாத நிலையில் காணொலி வாயிலாகப் பேசினார் ரஸ்கின் பாண்ட். தொடர்ந்து, விருதினை அவருடைய பேத்தியான சிஷ்டி பாண்ட் பெற்றுக்கொண்டார்.இலக்கியத்துக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதினை பெற்றுக... மேலும் பார்க்க