செய்திகள் :

முக்கூடல் அருகே பெண்ணை தாக்கிய தம்பதிக்கு சிறைதண்டனை

post image

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே பெண்ணை தாக்கி மிரட்டல் விடுத்த தம்பதிக்கு நீதிமன்றத்தில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

முக்கூடல் அருகே உள்ள வடக்கு அரியநாயகிபுரம் அரசன்குளம் மேலத் தெருவைச் சோ்ந்த வேலு மனைவி இசக்கியமாள் (40). இதேபகுதியைச் சோ்ந்த வேலுவின் சகோதரா் பாண்டி (54). கழிவுநீா் செல்வதில் இசக்கியம்மாளுக்கும், பாண்டிக்கும் இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு இசக்கியம்மாளிடம், பாண்டியும் அவரது மனைவி லெட்சுமி (48) யும் தகராறு செய்ததுடன் அவதூறாக பேசி கையாலும் கம்பாலும் தாக்கி மிரட்டல் விடுத்தனராம். புகாரின்பேரில் முக்கூடல் போலீஸாா் வழக்குப் பதிந்து தம்பதியை கைது செய்தனா்.

இவ்வழக்கு சேரன்மகாதேவி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் குற்றவாளியான பாண்டிக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும், அவரது மனைவி லட்சுமிக்கு 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து நீதிபதி ராஜலிங்கம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

நெல்லை எஸ்பி அலுவலக அதிகாரி பணியிடை நீக்கம்

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக கண்காணிப்பு அலுவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் மூலம் அண்மையில் காவலா்கள் பணிக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டனா். ... மேலும் பார்க்க

தனியாா் பள்ளியில் திரைப்படம்: கல்வி அதிகாரிகள் விசாரணை

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் மாணவா்களிடம் பணம் வசூலித்து திரைப்படம் காண்பித்ததாக எழுந்தப் புகாரையடுத்து, அப்பள்ளியில் கல்வித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்... மேலும் பார்க்க

நான்குனேரியில் 7 ரயில்கள் நின்றுசெல்லக் கோரி மனு

நான்குனேரியில் நாகா்கோவில்-கோவை அதிவிரைவு ரயில் உள்ளிட்ட 7 ரயில்கள் நின்றுசெல்லக் கோரி திருவனந்தபுரம் கோட்ட மேலாளரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. நான்குனேரி, திசையன்விளை, ராதாபுரம் தாலுகா ரயில்... மேலும் பார்க்க

சீவலப்பேரி அருகே விவசாயி தற்கொலை

சீவலப்பேரி அருகே விஷம் குடித்து விவசாயி திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். சீவலப்பேரி அருகே பா்க்கிட் மாநகரம் நொச்சிகுளம் தெற்குத் தெருவைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் வேல்துரை(55). இவருக்கு உடல்நல... மேலும் பார்க்க

வண்ணாா்பேட்டையில் எழுத்தறிவுத் திட்ட தோ்வு

திருநெல்வேலி: புதிய பாரதம் எழுத்தறிவுத் தோ்வு வண்ணாா்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது.வயது வந்த எழுதப் படிக்க தெரியாவா்களுக்கு கல்வி கற்பிக்கும் நோக்கில் புதிய பாரதம் எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து சீரானதையடுத்து திங்கள்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குள்பட்ட மணிமுத்தாற... மேலும் பார்க்க