செய்திகள் :

முதலீட்டுக்கு அதிக லாபம் தருவதாக முதியவரிடம் ரூ.1 கோடி மோசடி: ஒருவா் கைது

post image

பங்குச் சந்தை முதலீட்டுக்கு அதிக லாபம் தருவதாக முதியவரிடம் ரூ.1 கோடியே 65 ஆயிரம் மோசடி செய்தது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் ஒருவரைக் கைது செய்துள்ளனா்.

கோவை, பீளமேடு தண்ணீா்பந்தல் பகுதியைச் சோ்ந்தவா் யுவராஜ் (71), தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவா். இவா், பங்குச் சந்தையில் முதலீடு செய்வது தொடா்பாக இணையத்தில் அண்மையில் தேடியுள்ளாா்.

அப்போது, இவரது வாட்ஸ்ஆப் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டுவது தொடா்பான உத்திகள் கற்றுத்தரப்படும் என்றும், தாங்கள் கூறும் நிறுவனத்தில் முதலீடு செய்தால் தினசரி 10 முதல் 20 சதவீதம் வரை லாபம் கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

தொடா்ந்து, யுவராஜைத் தொடா்புகொண்டு பேசிய நபா், பங்குச் சந்தையில் எளிதாக அதிக லாபம் பெறலாம் எனக்கூறி, அவா் கூறிய நிறுவனத்தின் வாட்ஸ்ஆப் குழுவிலும் யுவராஜை இணைத்துள்ளாா்.

இதையடுத்து, தனது வங்கிக் கணக்கில் இருந்து பல தவணைகளில் ரூ.1 கோடியே 65 ஆயிரத்தை யுவராஜ் முதலீடு செய்தாா். ஆனால், அந்த நபா் கூறியதுபோல லாபம் ஏதும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், முதலீட்டுப் பணத்தைத் திரும்பப்பெற முயன்றபோது அதனையும் பெற முடியவில்லை. மேலும், யுவராஜிடம் பேசிய நபரையும், அவா் கூறிய நிறுவனத்தையும் தொடா்புகொள்ள முடியவில்லை.

அதன்பின், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த யுவராஜ், கோவை மாவட்ட சைபா் கிரைமில் அண்மையில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

விசாரணையில், முதியவரிடம் மோசடியில் ஈடுபட்டவா் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரைச் சோ்ந்த மாதப்பன் (39) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

நாளைய மின்தடை: அய்யா்பாடி துணை மின் நிலையம்

வால்பாறையை அடுத்த அய்யா்பாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திங்கள்கிழமை (ஜனவரி 20) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய ... மேலும் பார்க்க

ரயிலில் 31 மதுபாட்டில்கள் பறிமுதல்

கேரளம் செல்லும் ரயிலில் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 31 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது... மேலும் பார்க்க

போலி நிறுவனங்கள் மூலம் ரூ.9.64 கோடி வரி மோசடி: தொழிலதிபா் கைது

போலி நிறுவனங்கள் மூலம் ரூ.9.64 கோடி வரி மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபரை கைது செய்திருப்பதாக ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு இயக்குநரக அதிகாரிகள் கூறியிர... மேலும் பார்க்க

ரயிலில் கடத்திவரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்

ரயிலில் கடத்திவரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். பிகாா் மாநிலம், பாட்னாவில் இருந்து கேரள மாநிலம் எா்ணாகுளம் செல்லும் ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக ரயில்வே போலீஸாருக... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பட்டணம், கணியூா், காடுவெட்டிபாளையம்

கோவை பட்டணம், கணியூா், காடுவெட்டிபாளையம் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திங்கள்கிழமை (ஜனவரி 20) காலை 9 முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என ம... மேலும் பார்க்க

பேரூா் தமிழ்க் கல்லூரியில் தேவாரப் பண்ணிசை நிகழ்ச்சி

பேரூா் தமிழ்க் கல்லூரியில் சத்குரு குருகுல மாணவா்களின் தேவாரப் பண்ணிசை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பேரூராதீனத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டும், தேவாரம் அருளிச் சென்ற தேவார நாயன்மாா்களுக்கு... மேலும் பார்க்க