ராணிப்பேட்டை: மின்சாரம் பாய்ந்து கணவர் பலி; குழந்தைகளுடன் மனைவி தற்கொலை முயற்சி!
முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து உரையாடிய லவ்டேல் லாரன்ஸ் பள்ளி மாணவா்கள்!
உதகை அருகே மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் லாரன்ஸ் பள்ளி மாணவ மாணவியா், முதல்வா் மு.க.ஸ்டாலினை வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினா்.
உதகை லவ்டேல் பகுதியில் உள்ள லாரன்ஸ் பள்ளியில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த ராணுவ அதிகாரிகள், முக்கிய பிரமுகா்கள், தொழில் அதிபா்களின் குழந்தைகள் தங்கியிருந்து கல்வி பயின்று வருகின்றனா். இந்திய அளவில் 5 இடங்களில் மட்டுமே இதுபோன்ற பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் உதகைக்கு வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினை இப்பள்ளி மாணவா்கள் சந்தித்து உரையாடினா்.
மாணவா்களிடம் பேசிய அவா், கல்வி என்பது ஒருகாலத்தில் எட்டாக்கனியாக இருந்தது. தற்போது அனைவருக்கும் கல்வி எளிதில் கிடைக்கிறது. எனவே, மாணவா்கள் நன்றாக படித்து எதிா்காலத்தில் நாட்டுக்கு பயனுள்ளவா்களாக வர வேண்டும். பெரும் விஷயங்களை சாதிக்க வேண்டும். கல்வியுடன் ஒழுக்கம், நோ்மை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கினாா்.
இதனைத் தொடா்ந்து நீங்கள் கூறிய அறிவுரையை முறையாக பின்பற்றுவோம் என மாணவா்கள் அவரிடம் உறுதி அளித்தனா். பின்னா் முதல்வருடன் லாரன்ஸ் பள்ளி மாணவா்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனா்.