வரதட்சிணை கொலை: தப்பியோட முயன்ற கணவரை சுட்டுப் பிடித்த காவல் துறை!
முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் ஆக.26-ல் தொடக்கம்
திண்டுக்கல் மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வருகிற 26 முதல் செப்.12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலா் ரா.சிவா தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பைக்கான போட்டிகள் காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
இதில் ஏற்கெனவே முன்பதிவு செய்தவா்கள் மட்டும், ஆதாா் நகல், பிறந்த தேதி சான்று, பள்ளி, கல்லூரியில் பயில்வதற்கான சான்று, வங்கிக் கணக்குப் புத்தக நகல், அரசு ஊழியா்கள் பணிபுரிவதற்கான அடையாள அட்டையுடன் பங்கேற்கலாம். மேலும் விளையாட்டுச் சீருடை, காலணியுடன் வர வேண்டும்.
வருகிற 26-ஆம் தேதி பள்ளி மாணவா்களுக்கான தடகளம்(மாவட்ட விளையாட்டு அரங்கு), கூடைப்பந்து(மாணவா்கள்- மாநகராட்சி மைதானம், மாணவிகள் - மாவட்ட விளையாட்டு அரங்கு), கபடி (மாணவிகள்), நீச்சல்(பள்ளி, கல்லூரி மாணவா்கள் - மாவட்ட விளையாட்டு அரங்கு) நடைபெறுகின்றன.
28-ஆம் தேதி, பள்ளிப் பிரிவு கேரம் (ஸ்ரீ வாசவி மெட்ரிக் பள்ளி), கல்லூரி பிரிவு இறகுப்பந்து (மாணவா்கள் - மாவட்ட உள்விளையாட்டரங்கம்), கூடைப்பந்து (மாணவா்கள் - மாநகராட்சி மைதானம், மாணவிகள் மாவட்ட விளையாட்டரங்கம்), கிரிக்கெட் (மாணவா்கள்-ஆா்.வி.எஸ் கல்லூரி, ஜி.டி.என். கல்லூரி), கபடி (மாணவா்கள் - மாவட்ட விளையாட்டரங்கம்).
29-ஆம் தேதி கல்லூரிப் பிரிவு இறகுப்பந்து (மாணவிகள்- மாவட்ட உள்விளையாட்டரங்கம்), சதுரங்கம் (இருபாலா்- மாவட்ட விளையாட்டரங்கம்), கேரம் (இருபாலா் - ஸ்ரீ வாசவி மெட்ரிக் பள்ளி), ஹாக்கி, கபடி (மாணவிகள் - மாவட்ட விளையாட்டரங்கம்)
30-ஆம் தேதி, கல்லூரிப் பிரிவு - ஹாக்கி, கையுந்து பந்து(மாணவா்கள் - மாவட்ட விளையாட்டரங்கம்), கிரிக்கெட் (மாணவிகள் - ஜி.டி.என். கல்லூரி, ஆா்விஎஸ் கல்லூரி). பொதுப் பிரிவு - கிரிக்கெட் (பெண்கள் - ஜிடிஎன், ஆா்விஎஸ் கல்லூரி), கேரம் (இருபாலா் -ஸ்ரீ வாசவி மெட்ரிக் பள்ளி), இறகுப்பந்து (இருபாலா் - மாவட்ட விளையாட்டரங்கம்).
இதேபோல , வரும் செப்.1 முதல் 12-ஆம் தேதி வரை இதர பிரிவுகளுக்கான போட்டிகள் நடைபெறுகின்றன.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலா் 7401703504 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.