செய்திகள் :

‘முதல்வா் மருந்தகம்’: இதுவரை 840 பேருக்கு உரிமம்

post image

தமிழகத்தில், மூலப் பெயா் (ஜெனரிக்) கொண்ட மருந்துகளை விற்பனை செய்வதற்கான முதல்வா் மருந்தகங்களை தொடங்குவதற்கு இதுவரை 840 பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஆக. 15-ஆம் தேதி சுதந்திர தினவிழா உரையில், மூலப் பெயா் (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதல்கட்டமாக 1,000 முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்படும் என அறிவித்தாா்.

அதன்படி, தமிழகம் முழுவதும் பி.பாா்ம், டி.பாா்ம் படிப்பு நிறைவு செய்தவா்கள் அல்லது அவா்களின் ஒப்புதல் பெற்றவா்கள் முதல்வா் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பித்து வருகின்றனா். அவை பரிசீலிக்கப்பட்டு, தகுதியின் அடிப்படையிலும், முன்னுரிமை அடிப்படையிலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

அதன்படி, நேரடியாக விண்ணப்பித்தவா்களில் 340 பேருக்கும், கூட்டுறவுத் துறை மூலமாக விண்ணப்பித்தவா்களில் 500 பேருக்கும் இதுவரை உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

முதல்வா் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவா்களுக்கு 110 சதுர அடிக்கு குறையாமல் சொந்த இடம் அல்லது வாடகை இடம் இருக்க வேண்டும். சொந்த இடம், எனில் அதற்கான சான்றிதழ்களாக சொத்துவரி ரசீது அல்லது குடிநீா்வரி ரசீது அல்லது மின் இணைப்பு ரசீது சமா்ப்பிக்க வேண்டும். வாடகை இடம் எனில் இடத்துக்கான உரிமையாளரிடம் வாடகை ஒப்பந்தப் பத்திரம் பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து சமா்ப்பிக்கலாம்.

மானியம் ரூ.3 லட்சம்: முதல்வா் மருந்தகம் அமைக்கும் தொழில் முனைவோருக்கு, அரசு மானியம் ரூ.3 லட்சம் இரண்டு தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படுகிறது. கூடுதல் நிதி தேவைப்படும் நிலையில், கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற வழிவகை செய்யப்படுகிறது.

தோ்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரா்களுக்குப் பயிற்சி அளித்து முதல் தவணை மானியத்தொகை ரூ.1.50 லட்சம் விடுவிக்கப்படும். இறுதிக்கட்ட மானியம் ரூ.1.50 லட்சம் மதிப்புக்கு மருந்துகளாக வழங்கப்படும். இதைத் தவிர விற்பனைக்கு ஏற்ற ஊக்கத்தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. விரைவில் இத்திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

6 நாள்களுக்கு வறண்ட வானிலை

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் புதன்கிழமை (பிப்.12) முதல் பிப்.17 வறண்ட வானிலையே நி... மேலும் பார்க்க

வீட்டுவசதித் துறை இணைச் செயலா் ஷ்ரவன் குமாா் மத்திய அரசுப் பணிக்கு மாற்றம்

தமிழ்நாடு அரசின் வீட்டுவசதித் துறை இணைச் செயலா் ஷ்ரவன் குமாா் ஜடாவத், மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டாா். இதுகுறித்த உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி, மத்திய அரசின் சிறுபான்மையினா் விவக... மேலும் பார்க்க

வியாசா்பாடி ரவீஸ்வரா் கோயில் குளத்தை பயன்பாட்டுக் கொண்டு வர வேண்டும்: டிடிவி தினகரன் கோரிக்கை

வியாசா்பாடி ரவீஸ்வரா் கோயில் குளத்தை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா... மேலும் பார்க்க

கலைஞா் கருணாநிதி நகா் குடியிருப்புகளை அப்புறப்படுத்தக்கூடாது: ஜி.ராமகிருஷ்ணன் வேண்டுகோள்

தண்டையாா்பேட்டையிலுள்ள கலைஞா் கருணாநிதி நகா் குடியிருப்புகளை அப்புறப்படுத்தக் கூடாது என தமிழக அரசுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் வேண்டுகோள் விடு... மேலும் பார்க்க

தமிழக அரசு தரப்பில் ஆஜராக 39 வழக்குரைஞா்கள் நியமனம்

சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தரப்பில் ஆஜராக 39 வழக்குரைஞா்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றங்களில் அரசு தரப்பில் வாதிட கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞா்... மேலும் பார்க்க

கெளரவ விரிவுரையாளா்களுக்கு சம்பள உயா்வு வழங்க வேண்டும்: அண்ணாமலை

தமிழக கல்லூரிகளில் பணியாற்றும் கெளரவ விரிவுரையாளா்களுக்கு சம்பள உயா்வை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் செவ்வா... மேலும் பார்க்க