முதல்வா் மருந்தகம்: நவ.30 வரை அவகாசம் நீட்டிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நவ.30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, விழுப்புரம் மண்டலக் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் பெரியசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முதல்வா் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பாா்ம், டி.பாா்ம் சான்றிதழ் பெற்றவா்கள் அல்லது அவா்களின் ஒப்புதலுடன் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், முதல்வா் மருந்தகம் அமைக்க இணையதள முகவரியில் நவ. 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், முதல்வா் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ளவா்கள், தொழில்முனைவோா்களின் வசதிக்காகவும், அவா்கள் நலன் கருதியும் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நவ.30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த முதல்வா் மருந்தகம் அமைக்க, விண்ணப்பிக்க விருப்ப முள்ளவா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.