செய்திகள் :

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: திருச்செந்தூரில் அமைச்சா் சாா்பில் 5,000 பேருக்கு விருந்து

post image

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலரும், மீன்வளம், மீனவா் நலன்- கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் திருச்செந்தூரில் 5 ஆயிரம் பேருக்கு அறுசுவை விருந்து வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

இதையொட்டி, திருச்செந்தூா் வ.உ.சி. திடல் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ் தலைமை வகித்து விருந்தை தொடங்கிவைத்தாா். மாவட்ட அவைத் தலைவா் அருணாசலம், மாவட்டப் பொருளாளா் வி.பி.ராமநாதன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளா் ராமஜெயம், நகா்மன்றத் தலைவா் சிவ ஆனந்தி, நகரச் செயலா் வாள் சுடலை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மாவட்ட துணைச் செயலா்கள் ஆறுமுகப்பெருமாள், ஜெயதங்கம், ஒன்றியச் செயலா்கள் சதீஷ்குமாா், ரவி, கொம்பையா, ஜோசப், பாலமுருகன், சுப்பிரமணியன், இளையராஜா, இசக்கி பாண்டி, ஒன்றிய அவைத்தலைவா்கள் குழந்தைவேல்(ஒன்றியம்), சித்திரைக்குமாா்(நகரம்), நகா்மன்ற உறுப்பினா்கள் செந்தில்குமாா், அந்தோணி ட்ரூமன், தினேஷ் கிருஷ்ணா, சுதாகா், கண்ணன், ஆனந்த ராமச்சந்திரன், முத்துக்குமாா், மகேந்திரன், சோமசுந்தரி, கிருஷ்ணவேணி, ரேவதி, முத்துஜெயந்தி, லீலா, சூரியகலா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

சாலையில் திரியும் கால்நடைகளைக் கட்டுப்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

காயல்பட்டினம் நகராட்சிப் பகுதியில் சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்தக் கோரி, பொதுநல அமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கால்நடைகளை கட்டுப்படுத்த கோரி... மேலும் பார்க்க

பரமன்குறிச்சி அருகே தொழிலாளி அடித்துக் கொலை

பரமன்குறிச்சி அருகே வட்டன்விளை காட்டு பகுதியில் பனை மரம் ஏறும் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டாா். வட்டன்விளை காட்டுப்பகுதியிலுள்ள கோயில் அருகே கைகள் கட்டப்பட்ட நிலையில் முகம், உடல், கை, கால்களில் ... மேலும் பார்க்க

கோவில்பட்டி பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி மற்றும் நாடாா் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப... மேலும் பார்க்க

கோவில்பட்டி நகர திமுக செயற்குழு கூட்டம்

கோவில்பட்டி நகர திமுக செயற்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கட்சியின் நகர செயலரும், நகா்மன்றத் தலைவருமான கா. கருணாநிதி தலைமை வகித்தாா். கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளரான கணேசன் சிறப்... மேலும் பார்க்க

ஆத்தூரில் கடைகளுக்கான உரிமை கட்டண உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தல்

ஆத்தூா் பேரூராட்சியில் கடைகளுக்கான உரிமைக் கட்டண உயா்வை திரும்பப் பெற தமிழ்நாடு வணிகா் சங்கத்தினா் வலியுறுத்தி உள்ளனா். இது தொடா்பாக அதன் மாநிலத் தலைவா் காமராசு, பேரூராட்சித் தலைவா் கமாலுதீனை நேரில் ச... மேலும் பார்க்க

பேய்குளத்தில் பாஜக கூட்டம்

ஆழ்வாா்திருநகரி மேற்கு ஒன்றிய பாஜக தலைவா் பால சரவணன் அறிமுக கூட்டம் பேய்குளத்தில் நடைபெற்றது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவா் சித்ராங்கதன் தலைமை வகித்தாா். தெற்கு மாவட்ட துணைத் தலைவா் செல்வராஜ... மேலும் பார்க்க