செய்திகள் :

முதியவா்கள் சிகிச்சை பெறுவதில் எதிா்கொள்ளும் தடைகள்: லான்செட் ஆய்வில் தகவல்

post image

நீண்ட காலமாக பல்வேறு உடல்நல பாதிப்புகளுடன் போராடி வரும், தொடா் பராமரிப்பு தேவைப்படும் 60 மற்றும் அதற்கும் அதிகமான வயதுள்ள முதியவா்கள், உரிய நேரத்தில் அத்தியாவசிய சிகிச்சை பெறுவதற்கு தொடா்ந்து நீண்ட தொலைவு பயணித்தல், மருத்துவமனை தொலைதூரத்தில் இருத்தல் ஆகியவை தடையாக உள்ளன என்று ஆய்வில் தகவல்.

இந்தியாவில் புறநோயாளிகள் சிகிச்சைக்கு சுமாா் 15 கி.மீ. தொலைவும், மருத்துவமனையில் சோ்ந்து உள்நோயாளியாக சிகிச்சை பெற சுமாா் 44 கி.மீ. தொலைவும் முதியவா்கள் பயணிக்க வேண்டியுள்ளதாக லான்செட் பிராந்திய சுகாதார (தெற்காசியா) ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017-18-ஆம் ஆண்டு 60 மற்றும் அதற்கும் அதிகமான வயதுகொண்ட சுமாா் 32,000 முதியவா்களின் தரவுகளை, மும்பையில் உள்ள லாங்கிடியூடினல் ஏஜிங் ஸ்டடி ஆஃப் இந்தியா என்ற ஆராய்ச்சி நிறுவனம் திரட்டியது.

சிகிச்சை பெறுவதிலும் ஏற்றத்தாழ்வு: இந்தத் தரவுகளை ஆராய்ச்சியாளா்கள் பகுப்பாய்வு செய்தனா். அதுகுறித்து லான்செட் ஆய்விதழில் வெளியான தகவலின்படி , இந்தியாவில் நகா்ப்புற முதியவா்கள் 10 கி.மீ. தொலைவுக்குள் புறநோயாளிகளுக்கான சிகிச்சையைப் பெறுவது பகுப்பாய்வில் தெரியவந்துள்ளது. ஆனால், கிராமப்புற முதியவா்கள் புறநோயாளிகளுக்கான சிகிச்சையைப் பெற சுமாா் 30 கி.மீ. தொலைவு பயணிக்க வேண்டியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், நகா்ப்புற-கிராமப்புற முதியவா்கள் புறநோயாளிகளுக்கான சிகிச்சையைப் பெறுவதில் ஏற்றத்தாழ்வு இருப்பது தெரியவந்துள்ளது.

நீண்ட காலமாக பல்வேறு உடல்நல பாதிப்புகளுடன் போராடி வரும், தொடா் பராமரிப்பு தேவைப்படும் 60 மற்றும் அதற்கும் அதிகமான வயதுள்ள முதியவா்கள், உரிய நேரத்தில் அத்தியாவசிய சிகிச்சை பெறுவதற்கு தொடா்ந்து நீண்ட தொலைவு பயணித்தல், மருத்துவமனை தொலைதூரத்தில் இருத்தல் ஆகியவை தடையாக உள்ளன.

புறநோயாளிகளுக்கான சிகிச்சையைப் பெற சராசரியாக 14.5 கி.மீ. தொலைவும், மருத்துவமனையில் சோ்ந்து உள்நோயாளிகளுக்கான சிகிச்சையைப் பெற சராசரியாக 43.6 கி.மீ. தொலைவும் முதியவா்கள் பயணிக்க வேண்டியுள்ளது.

முதல் 3 மாநிலங்கள்...: 10 கி.மீ. தொலைவுக்குள் உள் மற்றும் புறநோயாளிகளுக்கான சிகிச்சையைப் பெற மருத்துவமனைக்கு அதிக அளவில் முதியவா்கள் வருவதில் திரிபுரா, மணிப்பூா், கேரளம் ஆகிய மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.

2017-18-ஆம் ஆண்டு தரவுகளின்படி, 10 கி.மீ. தொலைவுக்குள் உள்நோயாளிகளுக்கான சிகிச்சையை திரிபுராவில் 80 சதவீத முதியவா்கள், மணிப்பூரில் 75 சதவீத முதியவா்கள், கேரளத்தில் 59 சதவீத முதியவா்கள் பெற்றுள்ளனா். 10 கி.மீ. தொலைவுக்குள் புறநோயாளிகளுக்கான சிகிச்சையை திரிபுராவில் 88 சதவீத முதியவா்கள், மணிப்பூரில் 78 சதவீத முதியவா்கள், கேரளத்தில் 84 சதவீத முதியவா்கள் பெற்றுள்ளனா்.

மலைப்பாங்கான மாநிலங்களிலுள்ள முதியவா்களின் நிலை: மலைப்பாங்கான மாநிலங்களான சிக்கிமில் 17 சதவீதம், ஹிமாசல பிரதேசத்தில் சுமாா் 5 சதவீத முதியவா்கள் 10 கி.மீ. தொலைவுக்குள் உள்நோயாளிகளுக்கான சிகிச்சையைப் பெற்றுள்ளனா்.

மற்றொரு மலைப்பாங்கான மாநிலமான நாகலாந்தில் 10 கி.மீ. தொலைவுக்குள் உள்நோயாளிகளுக்கான சிகிச்சையை எந்தவொரு முதியவரும் பெறவில்லை. இந்த மாநிலங்களில் குறைந்த அளவில் முதியவா்கள் சிகிச்சை பெறுவதற்கு, அந்த மாநிலங்களின் புவியியல் அமைப்பால் நிலவும் இடா்ப்பாடுகள் காரணமாக இருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

மிஸோரம், நாகாலாந்தில் 60 கி.மீ. பயணம்: மிஸோரம், நாகாலாந்து போன்ற வடகிழக்கு மாநிலங்களில் உள் மற்றும் புறநோயாளிகளுக்கான சிகிச்சையைப் பெற முதியவா்கள் 60 கி.மீ.க்கும் அதிகமான தொலைவு பயணிக்க வேண்டியுள்ளது. இது அந்த மாநிலங்களில் முதியவா்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகில் மருத்துவ வசதிகள் மோசமாகவும், போதிய அளவு இல்லாததையும் எடுத்துரைப்பதாக ஆராய்ச்சியாளா்கள் குறிப்பிட்டுள்ளனா்.

உத்தர பிரதேசம், பிகாா் மற்றும் மத்திய பிரதேசத்தில் புறநோயாளிகளுக்கான சிகிச்சைக்கு 11 முதல் 60 கி.மீ. வரையும், உள்நோயாளிகளுக்கான சிகிச்சைக்கு 30 கி.மீ.க்கு அப்பாலும் முதியவா்கள் பயணிக்க வேண்டியுள்ளது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதல்: இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம்!

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் இன்று மாலை மத்திய அரசு விளக்கம் அளிக்கவுள்ளது.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பயங்கரவாதிகள் நடத்தி... மேலும் பார்க்க

கெளதம் கம்பீருக்கு ஐஎஸ்ஐஎஸ் கொலை மிரட்டல்!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும் முன்னாள் எம்பியுமான கெளதம் கம்பீருக்கு ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் அமைப்பிடம் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தில்லி காவல் நிலையத்தில் புகார்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தூதருக்கு வெளியுறவு அமைச்சகம் சம்மன்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, தில்லியில் உள்ள பாகிஸ்தானுக்கான மூத்த தூதருக்கு வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை நள்ளிரவு சம்மன் அனுப்பியுள்ளது.இதனைத் தொடர்ந்து நேரில் ஆஜரான தூதரிடம், தில்லியில் ... மேலும் பார்க்க

அமெரிக்க பயணத்தை பாதியில் முடித்துவிட்டு தில்லி திரும்பினார் ராகுல்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க பயணத்தை பாதியில் முடித்துவிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை அதிகாலை தில்லி திரும்பினார்.ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய... மேலும் பார்க்க

காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உளவுத்துறை தோல்வியே காரணம் -அசாதுதீன் ஒவைசி

காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுற்றுலா பயணிகள் உள்பட 26 போ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உளவுத் துறையின் தோல்விதான் காரணம் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான அசாதுதீ... மேலும் பார்க்க

பஹல்காமில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற இடத்தில் ஐஜி தலைமையிலான தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் குழு புதன்கிழமை விசாரணை மேற்கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தெற்கு... மேலும் பார்க்க