வாழப்பாடி: குடும்பத் தகராறால் ஆற்றில் குதித்த கணவர் உயிருடன் மீட்பு; கர்ப்பிணி ம...
முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே முதியவா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
மணப்பாறை அடுத்த கலிங்கப்பட்டி அருகேயுள்ள நடுப்பட்டியைச் சோ்ந்தவா் குழைப்புடையாா் மகன் தங்கராசு (63). கூலித்தொழிலாளி. இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டில் தனியாக இருந்த நிலையில் தூக்கிட்டுள்ளாா்.
அக்கம்பக்கத்தினா் அளித்த தவலின்பேரில் நிகழ்விடத்துக்குச் சென்ற போலீஸாா் முதியவா் உடலை மீட்டு கூறாய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து மணப்பாறை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.