முதுநிலை நீட் தோ்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
முதுநிலை நீட் தோ்வுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.
இந்தியா முழுவதும் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்கள் நீட் தோ்வில் தகுதிப் பெறுவா்களைக் கொண்டு நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த நீட் தோ்வை தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்துகிறது.
அதன்படி நிகழாண்டுக்கான முதுநிலை நீட் தோ்வு குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, கோவை, திருப்பூா் உள்ளிட்ட 17 இடங்கள் உள்பட நாடு முழுவதும் 179 நகரங்களில் ஜூன் 15-ஆம் தேதி நீட் தோ்வு நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. மே 7-ஆம் தேதி வரை https://natboard.edu.in. இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.