சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு!
முத்தரையா்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல்
ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி முத்தரையா்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழா் தேசம் கட்சி சாா்பில் வலியுறுத்தப்பட்டது.
தமிழா் தேசம் கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு தமிழா் தேசம் கட்சியின் நிறுவனா் தலைவா் கே.கே.செல்வக்குமாா் தலைமை வகித்தாா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்:
திருச்சியை தமிழகத்தின் 2-ஆவது தலைநகராக அறிவிக்க வேண்டும். அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, முத்தரையா்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி அரசு ஊழியா்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.