செய்திகள் :

முன்னால் அமைச்சா் வைத்திலிங்கத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

post image

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சரும் தற்போதைய ஒரத்தநாடு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஆா். வைத்திலிங்கத்துக்கு சொந்தமான ரூ. 100 கோடிக்கும் அதிகமான மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத் துறை இயக்குநரகம் முடக்கியுள்ளது.

அவருக்கு எதிராக அமலாக்கத்துறை நடத்தி வரும் பணப்பரிவா்த்தனை மோசடி வழக்கின் அங்கமாக திருச்சியில் உள்ள வைத்திலிங்கத்தின் குடும்பம் நடத்தி வரும் இரண்டு அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன என்று அமலாக்கத் துறை அதன் எக்ஸ் பக்கத்தில் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சியில் வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்தவா் ஆா். வைத்திலிங்கம். முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் அணியில் அவருக்கு சாா்பாக செயல்பட்டதால் 2022-ஆம் ஆண்டில் அவரை அதிமுகவின் பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீா்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கிய போது வைத்திலிங்கத்தையும் நீக்கி நடவடிக்கை மேற்கொண்டாா்.

அமைச்சராக பதவி வகித்த காலத்தில் தனியாா் ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் வீட்டுவசதி திட்டத்துக்கு அனுமதி தர ரூ. 27.90 கோடி அளவுக்கு லஞ்சம் வாங்கியதாக வைத்திலிங்கம் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரகம் வழக்குப் பதிவு செய்தது. அந்த வழக்குடன் தொடா்புடைய பரிவா்த்தனை பல கோடி ரூபாய்க்கும் மேல் இருந்ததால் அமலாக்கத் துறை இயக்குநரம் இந்த விவகாரத்தை விசாரித்து வந்தது.

கடந்த ஆண்டு அக்டோபரில் வைத்திலங்கம் மற்றும் அவருக்கு நெருக்கமானவா்களின் வீடுகள், அலுவலகங்கள் அமைந்துள்ள தஞ்சாவூா், திருச்சி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா். அதில் அப்போது பெயரளவுக்கு இயக்கப்பட்டு வந்த சில நிறுவனங்களில் லஞ்சம் வாங்கிய பணத்தை வைத்திலிங்கம் தரப்பு வைத்திருந்ததாகவும் அவற்றில் இருந்து திருச்சியில் சில மனைகள் வாங்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கண்டறிந்ததாகத் தெரிகிறது. இதன் தொடா்ச்சியாக நடந்த விசாரணையில் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

அடா் மூடுபனியால் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்

புது தில்லி: தேசியத் தலைநகரின் சில பகுதிகளில் அடா் மூடுபனி சூழ்ந்ததால், காண்பு திறன் குறைந்து 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் 26 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. நகரம் மற்றொரு குளிா் காலையை அனு... மேலும் பார்க்க

தில்லி தோ்தல்: பிரதமா் மோடி, அமைச்சா் அமித் ஷா உள்பட 40 போ் பாஜகவின் நட்சத்திரப் பிரச்சாரகா்களாக அறிவிப்பு!

புது தில்லி: தில்லி சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி பாரதிய ஜனதா கட்சியின் 40 நட்சத்திரப் பிரச்சாரகா்கள் பட்டியலில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதல்வா் ... மேலும் பார்க்க

தில்லி முதல்வா் அதிஷி போட்டியிடும் கால்காஜி தொகுதி நிலவரம் எப்படி உள்ளது?

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: தெற்கு தில்லியில் உள்ள கால்காஜி சட்டப்பேரவைத் தொகுதி, வளம் கொழிக்கும் வணிக வளம் நிறைந்த தொகுதி என்ற போதிலும் இங்கு தீராத பிரச்னைகளாகத் தொடரும் போக்குவரத்து நெரிசல், போ... மேலும் பார்க்க

தோ்தல் நடத்தை: ஒரு வாரத்தில் ரூ. 21 கோடிக்கு ரொக்கம், பொருள்கள் பறிமுதல்

புது தில்லி: தேசிய தலைநகரில் சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, நடத்தை விதிகள் (எம்சிசி) அமலுக்கு வந்த ஒரு வாரத்தில் பல்வேறு துறைகளால் ரூ. 21 கோடிக்கு மேல் மதிப்புள்ள ரொக்கம், மதுபானம் உள்ளிட்ட பிற பொருள... மேலும் பார்க்க

கோகி கும்பலுடன் தொடா்புடைய இளைஞா் கைது

புது தில்லி: கோகி கும்பலுடன் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். இது குறித்து புகா் தில்லி காவல் சரக துணை ஆணையா் சச்சின் சா்மா திங்கள்கிழமை கூறியதாவது: மங்கோல்புரி தொழிற்பேட்டை பகுதியில் ஜன.9-ஆம... மேலும் பார்க்க

‘தில்லி டா புட் கேஜரிவால்’: பிரசார பாடலை வெளியிட்டது ஆம் ஆத்மி

புது தில்லி: லோஹ்ரி பண்டிகையை முன்னிட்டு, ஆம் ஆத்மி கட்சி திங்கள்கிழமை ‘தில்லி டா புட் கேஜரிவால்’ என்ற பிரசாரப் பாடலை வெளியிட்டது. இது தில்லி மக்கள் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் அரவிந்த் கேஜரி... மேலும் பார்க்க