செய்திகள் :

மும்பையில் இரவு வாழ்க்கை ஆரம்பம்; மகா.வில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி

post image

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் வர்த்தக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. இரவில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் கூடுதல் நேரம் திறந்திருந்தால் போலீஸாரும், உள்ளாட்சி அமைப்பினரும் தொந்தரவு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகு செயல்படும் கடைகள், சூப்பர் மார்க்கெட், மால்கள், வர்த்தக நிறுவனங்கள் மீது சில நேரங்களில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதையடுத்து கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை 24 மணி நேரமும் செயல்பட அனுமதி கொடுப்பது தொடர்பாக சமீபத்தில் அமைச்சரவை கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாநில அரசு புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருக்கிறது. அதில் மதுபானங்களை விற்பனை செய்யும் கடைகள் தவிர்த்து இதர வர்த்தக நிறுவனங்கள் எந்த வித நேரக்கட்டுப்பாடும் இல்லாமல் செயல்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மாதிரி படம்
மாதிரி படம்

இதற்கு முன்பு 2017ம் ஆண்டு பெர்மிட் ரூம்கள், பீர் பார்கள், டான்ஸ் பார்கள், ஹூக்கா பார்லர்கள், டிஸ்கோ கிளப்கள் மற்றும் ஒயின் ஷாப்கள் போன்ற மதுபானம் வழங்கும் வர்த்தக நிறுவனங்களின் நேரத்தை நிர்ணயித்து அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆரம்பத்தில் சினிமா தியேட்டர்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தன, ஆனால் அவை செயல்படும் நேரம் 2020ம் ஆண்டு தனி அறிவிப்பு மூலம் திருத்தி அமைக்கப்பட்டது. புதிய அறிவிப்பின் படி மதுபானங்களை சப்ளை செய்யும் நிறுவனங்கள் மற்றும் மதுபானக் கடைகள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் திறந்து மூடவேண்டும். மால்கள், கடைகள், சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் சேவை வழங்கும் நிறுவனங்கள் உட்பட மற்ற அனைத்து வணிக நிறுவனங்களும் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்பட சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேசமயம் அந்த உத்தரவில் தொழிலாளர்களின் உரிமைகளும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதில் தொழிலாளர்கள் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்றும், ஒவ்வொரு ஊழியரும் வாரம் ஒரு முறை தொடர்ச்சியான 24 மணிநேரம் விடுமுறை எடுக்கவேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்களின் தொழில் வளர்ச்சி மற்றும் விருப்பமான நேரத்தில் செயல்பட அனுமதிக்கப்படும் அதேநேரத்தில் ஊழியர்களின் நலன் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

24 மணி நேர வணிக நாள் நள்ளிரவில் தொடங்கி சுழற்சியாக வரக்கூடியது என்று அதில் குறிப்பிடுகிறது. இந்த நடவடிக்கை மகாராஷ்டிராவின் வணிக நடவடிக்கைகளை அதிகரிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக மும்பை, புனே மற்றும் நாக்பூர் போன்ற நகரங்களில், இரவு நேர ஷாப்பிங், சேவைகள் மற்றும் உணவு விற்பனை நிலையங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து அரசு இம்முடிவு எடுத்துள்ளது. அரசின் இந்த முடிவுக்கு தொழிலதிபர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ஷாப்பிங் மால்

மேலும் இனி போலீஸாரின் தொந்தரவு இல்லாமல் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் தனியார் நிறுவனங்களில் ஊழியர்களின் பணி நேரத்தை 9 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரமாக அதிகரிக்கவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான திட்டம் அமைச்சரவையின் பரிசீலனையில் இருப்பதாக மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆகாஷ் தெரிவித்தார். தொழிலாளர்களுக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்ட பிறகு பெண்களும் இரவு நேரத்தில் பணியாற்ற முடியும் என்றும் ஆகாஷ் தெரிவித்தார்.

தீபாவளி நேரத்தில் கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருப்பது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பை போன்ற நகரங்களில் மக்கள் இரவு

அமெரிக்கா: குழந்தைகளுக்குப் பெயர் வைத்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பெண்; பின்னணி என்ன?

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர், குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதையே ஒரு தொழிலாக மாற்றி, அதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.அமெரிக்காவின் சான் ... மேலும் பார்க்க

75 வயதில் 35 வயது பெண்ணுடன் திருமணம்; மறுநாள் நடந்த அதிர்ச்சி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அது போன்று மனைவி இறந்த பிறகு தனிமையில் வாழ்ந்த முதியவர் தனது 75 வயதில் தனக்கு துணை தேவை என்று 35 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார். உத்தரபிரதேசத்தின் ஜான்பூர் மாவட்டத்தில்... மேலும் பார்க்க

வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை - கயிற்றால் கட்டி, வனத்துறையிடம் ஒப்படைத்த சிங்கப்பெண்!

நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்த சிறுத்தைபெண்கள் சில நேரங்களில் எதையும் எதிர்த்து போராடும் ஆற்றல் பெற்றவர்களாக இருப்பவர். எதாவது ஆபத்து வரும் போதுதான் அவர்களின் துணிச்சல் வெளியில் தெரிய வரும். பல பெண்கள்... மேலும் பார்க்க

குஜராத்: இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்காக ஏரியில் குதித்த வாலிபர்கள்; விபரீதத்தில் முடிந்த தற்கொலை நாடகம்

குஜராத் மாநிலம் காந்தி நகர் அருகில் உள்ள நர்திபூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த 3 வாலிபர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது விபரீதத்தில் முடிந்துள்ளது. தற்போது தசரா என்பதால் நள்ளிரவு வரை தாண்டியா நடனம் நடை... மேலும் பார்க்க

சென்னை: தி.நகரில் 1.2 கி.மீ தூரத்திற்கு மேம்பாலம் திறப்பு; பயணிகள் வரவேற்பு | Photo Album

Rain Update: 'இந்த வாரம் எப்போது மழை?' - சென்னை, கோவை, மதுரை, புதுச்சேரியின் வானிலை அப்டேட்! மேலும் பார்க்க

காலாவதியான தடுப்பூசி பாஸ்போர்ட்: சிறுவனுக்கு சிறிய கதவு வழியாக உணவு - வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

சீனாவில், தடுப்பூசி பாஸ்போர்ட்டுகள் மற்றும் டிஜிட்டல் சுகாதார ஐடிகள் தொடர்பான கடுமையான விதிகள் உலகளவில் கவனம் பெற்று வருகிறது. காலாவதியான தடுப்பூசி பாஸ்போர்ட்டுகளுடன் பிடிபட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்... மேலும் பார்க்க