மும்பை, சென்னை, ஆமதாபாத்தில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு!
நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத் துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருக்கிறது.
சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலும் அச்சுறுத்தும் அளவுக்கு இல்லையென்றாலும், கவனிக்கத் தக்க வகையில் நோய் பாதிப்பு பதிவாகி வருகிறது.
குறிப்பாக மும்பை, சென்னை, ஆமாதாபாத் நகரங்களில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.
மும்பையில் மே மாதத்தில் மட்டும் 95 புதிய கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த ஜனவரி முதல் மகாராஷ்டிர மாநில கரோனா பாதிப்பே வெறும் 106 தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.