செய்திகள் :

மும்பை: பங்குச்சந்தையில் அதிக லாபம் பார்க்கலாம்... போலி ஆப் மூலம் கோடிகளை இழந்த முதியவர்

post image

மும்பையில் முதியவர்கள் மற்றும் பெண்களிடம் தங்களை போலீஸ், சி.பி.ஐ, அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் என்று கூறி டிஜிட்டல் முறையில் கைது செய்து கோடிக்கணக்கில் மர்ம கும்பல் பணம் பறித்து வருகிறது. இக்கும்பல் பங்குச்சந்தையில் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி போலி மொபைல் ஆப்கள் மூலமும் மோசடி செய்து வருகிறது. இக்கும்பலின் மோசடியில் மும்பையைச் சேர்ந்த மேலும் ஒரு முதியவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

தெற்கு மும்பை கொலாபாவில் வசிக்கும் 75 வயது முதியவர் ஒருவருக்குக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வாட்ஸ் ஆப் மூலம் ஆன்யா ஸ்மித் என்பவரின் தொடர்பு கிடைத்தது. அப்பெண் முதியவரிடம்தான் கிளப்17 என்ற முதலீட்டு ஆலோசனை நிறுவனத்தில் பணியாற்றுவதாகத் தெரிவித்தார். அதோடு முதியவருக்கு அடிக்கடி அப்பெண் பங்குச்சந்தை முதலீடு தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார்.

முதியவர்
முதியவர்

இதன் மூலம் முதியவரின் நம்பிக்கையைப் பெற்ற அப்பெண் தங்களது கம்பெனியின் மூலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று தெரிவித்தார். அப்பெண்ணின் வார்த்தையை நம்பி அப்பெண் அனுப்பிய மொபைல் ஆப் மூலம் முதியவர் முதலீடு செய்தார்.

கடந்த செப்டம்பர் முதல் அக்டோபர் வரை முதியவர் 11.6 கோடி ரூபாயை முதலீடு செய்தார். மொத்தம் 22 பரிவர்த்தனைகள் மூலம் அவர் பல்வேறு வங்கிக்கணக்கிற்குப் பணத்தை அனுப்பினார். அவர் முதலீடு செய்த பணம் எந்த அளவுக்கு லாபத்தைக் கொடுத்திருக்கிறது என்ற விபரத்தை மொபைல் ஆப்பில் பார்க்க முடிந்தது.

அதில் அதிகப்படியான லாபம் கிடைத்திருப்பதாகக் காட்டியது. ஆனால் ஒரு கட்டத்தில் முதியவர் மொபைல் ஆப்பில் இருந்து தனது பணத்தை எடுக்க முயன்றார். ஆனால் அதற்கு 20 சதவீத வரி கட்டவேண்டும் என்று அப்பெண் தெரிவித்தார். அதனை நம்பி 20 சதவீத பணத்தையும் முதியவர் செலுத்தினார். அப்படி இருந்தும் அவரால் பணத்தை எடுக்க முடியவில்லை. மேலும் சில வரிகளைச் சொல்லி பணம் செலுத்தும்படி கேட்டனர். இதனால் சுதாரித்துக்கொண்ட முதியவர் இது குறித்து போலீஸில் புகார் செய்தார்.

போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் டெல்லியைச் சேர்ந்த தினேஷ் மற்றும் ராஜேஷ் ஆகியோர் தங்களது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.9.5 லட்சத்தை முதியவரிடமிருந்து பெற்று இருந்தனர். அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்தனர். இம்மோசடி தொடர்பாக தலைமறைவாக இருக்கும் ராம்கிஷோர், முக்தார் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

தஞ்சை: 916 முத்திரை, போலி நகை - அடகு வைத்து மோசடி செய்த 2 பெண்கள் உட்பட மூன்று பேர் கைது!

தஞ்சாவூர் அருகே உள்ள ரெட்டிபாளையம் பகுதியில், தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ரெட்டிபாளையம் சாலையில் உள்ள காந்திரபும் பகுதியை சேர்ந்த திவ்யா(31), செக்கடி பகுதியை சேர்ந்த சரஸ்வதி(38) ஆ... மேலும் பார்க்க

சென்னை: இளம்பெண்களை காரில் விரட்டிய கும்பல்... பேசுபொருளான சம்பவம் குறித்து போலீஸ் சொல்வதென்ன?

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நான்கு பெண்கள், இரண்டு ஆண்கள் என ஆறு பேர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காரில் சென்று கொண்டிருந்தனர். அதிகாலை 4 மணியளவில் மு... மேலும் பார்க்க

ரூ.1 கோடி இன்ஸூரன்ஸ் தொகை; பணத்துக்காக தங்கையைக் கொன்று நாடகமாடிய தொழிலதிபர் - சிக்கியதெப்படி?

ஆந்திரா மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர், அவரின் சகோதரியை கொலை செய்ததற்காக கைது செய்யபட்டுள்ளார். ரியல் எஸ்டேட் செய்துவரும் 30 வயது இளைஞர் மலப்பட்டி அஷோக் குமார். இவரது விவராகத்தான, க... மேலும் பார்க்க

இளம்பெண் பாலியல் வழக்கு; `குற்றம் நிரூபிக்கப்படவில்லை'- மரண தண்டனை கைதியை விடுவித்த உச்ச நீதிமன்றம்!

மும்பையில் கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி 23 வயது எஸ்தர் என்ற பெண் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஐதராபாத்திற்கு விடுமுறையில் சென்றுவிட்டு மும்பைக்கு ரயிலில் வந்தார். அவர் மும்பையில் டி.சி.எஸ் நிறுவனத்தில்... மேலும் பார்க்க

வனவிலங்கு வேட்டையில் இளைஞர் சுட்டுக் கொலை... யானை தாக்கி உயிரிழந்ததாக நாடகம்.. 13 பேர் கைது!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள தேவர்சோலை 3- ம் டிவிஷன் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஜம்ஷித் என்பவர் கடந்த சனிக்கிழமை அதிகாலை யானை தாக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதனை விசாரித்த வனத்துறையினர், ... மேலும் பார்க்க

வாணியம்பாடி: இளம்பெண்ணிடம் நெருங்கிப் பழகிவிட்டு, திருமணத்துக்கு மறுப்பு - வங்கி ஊழியர் கைது

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் பகுதியில் ஒரு தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது.இந்த வங்கியில், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த தன்ராஜ் (30) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இதே வ... மேலும் பார்க்க