செய்திகள் :

மும்பை: ஷாருக்கான் பங்களாவைப் புதுப்பிக்கும் பணிக்கு எதிராக மனு; பசுமை தீர்ப்பாயம் சொல்வது என்ன?

post image

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மும்பை பாந்த்ராவில் உள்ள தனது மன்னத் பங்களாவைப் புதுப்பித்துக் கட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளார். அதோடு கூடுதல் மாடிகளும் கட்டி வருகிறார்.

இதையடுத்து ஷாருக்கான் அருகில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வாடகைக்குச் சென்று இருக்கிறார். மன்னத் பங்களாவைப் புதுப்பித்துக் கட்ட அனுமதி வழங்கப்பட்டதில் விதிமுறை மீறல் நடந்து இருப்பதாகக் கூறி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சமூக ஆர்வலர் சந்தோஷ் என்பவர் மனுத்தாக்கல் செய்தார்.

இம்மனுவில் ஷாருக்கான் பங்களாவைப் புதுப்பித்துக் கட்ட அனுமதி வழங்கியதில் மகாராஷ்டிரா மண்டல கடற்கரையோர மேலாண்மை ஆணையம் தவறு செய்துவிட்டதாகக் குறிப்பிட்டு இருந்தார்.

ஷாருக் கான்
ஷாருக் கான்

இம்மனு தீர்ப்பாயத்தில் நீதிபதி தினேஷ் குமார் மற்றும் விஜய் குல்கர்னி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் இறுதியில் அம்மனுவைத் தள்ளுபடி செய்த தீர்ப்பாய நீதிபதிகள், 'கடற்கரையோர ஒழுங்குமுறை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில், ஏற்கனவே இருந்த கட்டிடத்தில்தான் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அங்கு இருந்த சாலைகளில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை எனவும், கடற்கரையோர ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கு உட்பட்டுத்தான் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தனர்.

மேலும், கடற்கரையோர ஒழுங்குமுறை ஆணையத்தில் பெறப்பட்ட அனுமதியின் அடிப்படையில்தான் கூடுதலாக இரண்டு மாடிகள் கட்டுவதாகவும், மன்னத் பங்களா இருக்கும் பகுதியை குடியிருப்புப் பகுதி என்று மும்பை மேம்பாட்டுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஷாருக்கான் பங்களா தற்போது 6 மாடிகள் கொண்டது ஆகும். அதில் கூடுதலாக 7 மற்றும் 8வது மாடியைக் கட்டுகிறார்.

ஷாருக் கான்
ஷாருக் கான்

6வது மாடியிலிருந்து 7வது மாடிக்கு உள்பக்கமாக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுக் கட்டப்பட்டு வருகிறது. ரூ.25 கோடியில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் 8.67 கோடி ரூபாய் வாடகைக்கு ஷாருக்கான் அருகில் உள்ள ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

Vikrant Massey: சீரியல் நடிகர் டு தேசிய விருது -காபி ஷாப்பில் வேலை செய்தவர் வென்று காட்டியது எப்படி?

நடந்துமுடிந்த 71வது தேசிய விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை வென்றவர் விக்ராந்த் மாஸ்ஸி. 12த் ஃபெயில் திரைப்படத்தில் அவர் ஏற்றிருந்த மனோஜ் குமார் ஷர்மா என்ற கதாபாத்திரத்துக்காக இந்த விருது வழங்... மேலும் பார்க்க

Janhvi Kapoor: அம்மாவின் சேலையில் ஜொலித்த ஜான்வி கபூர் - க்ளாசிக் க்ளிக்ஸ்!

ஜான்வி கபூர்ஜான்வி கபூர்ஜான்வி கபூர்ஜான்வி கபூர்ஜான்வி கபூர்ஜான்வி கபூர்ஜான்வி கபூர்ஜான்வி கபூர்ஜான்வி கபூர்ஜான்வி கபூர்ஜான்வி கபூர்ஜான்வி கபூர்ஜான்வி கபூர்ஜான்வி கபூர்ஜான்வி கபூர்கீர்த்தி சுரேஷ் - மி... மேலும் பார்க்க

``ஆமிர் கான் பட தோல்வியால்தான் திருமணம் செய்தேன்" நினைவுகளைப் பகிர்ந்த அக்‌ஷய்குமார்

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிகை ட்விங்கிள் கன்னாவை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். அத்திருமணம் எப்படி நடந்தது என்பது குறித்து அக்‌ஷய் குமார் தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். ரஜத் சர... மேலும் பார்க்க

Katrina kaif: "எங்கள் வாழ்வின் சிறந்த அத்தியாயம்" - கத்ரீனா உருக்கமான பதிவு

பாலிவுட் நட்சத்திர ஜோடியான விக்கி கௌஷல் - கத்ரீனா கைஃப் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளனர். 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் ராஜஸ்தானில் கோலாகலமாக இந்த பாலிவுட் தம... மேலும் பார்க்க

Zubeen Garg: `மக்கள் கலைஞன்' ஜூபீன் உடல் நல்லடக்கம்; திரண்ட மக்கள் - இவ்வளவு அன்பு ஏன் தெரியுமா?

சிங்கப்பூரில் நடந்த கான்சர்ட் சென்ற பிரபல பாடகர் ஜூபீன் கார்க் கடந்த செப்டம்பர் 19-ம் தேதி நீரில் மூழ்கி இறந்த செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி மேற்கொண்டிருந... மேலும் பார்க்க

நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் மீதும், ரன்பீர் கபூர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறை; காரணம் என்ன?

நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் மீதும், ரன்பீர் கபூர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி இருக்கும் 'தி பாட்ஸ் ஆப் பாலிவுட்' (The... மேலும் பார்க்க