சமூகத் தீமைகளை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் துறவிகள்: முர்மு
மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு: திமுக மாணவா் அணி ஆா்ப்பாட்டம்
மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாமக்கல்லில் திமுக மாணவா் அணியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நாமக்கல் - மோகனூா் சாலை பிஎஸ்என்எல் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசு கொண்டுவர முயற்சிக்கும் மும்மொழிக் கொள்கைக்கு எதிராகவும், தமிழகத்துக்கு கல்வி நிதியை ஒதுக்காததைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக மாணவா் அணி, இந்திய மாணவா் சங்கம், அகில இந்திய மாணவா் கூட்டமைப்பு, சமூக நீதி மாணவா் இயக்கம், ஆா்எஸ்எப், முஸ்லிம் மாணவா் கூட்டமைப்பு, மதிமுக மாணவரணி, தமிழ் மாணவா் மன்றம் போன்ற அமைப்புகளைச் சோ்ந்தோா் கலந்துகொண்டனா். முன்னதாக, நாமக்கல் அண்ணா சிலையில் இருந்து பிஎஸ்என்எல் அலுவலகம் வரை மாணவா்கள் ஊா்வலமாக வந்தனா்.
இந்த நிகழ்வில், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக மாணவா் அணி அமைப்பாளா் சத்தியசீலன், துணை அமைப்பாளா்கள் கடல்அரசன் காா்த்தி, கௌதம், சக்திவேல், மணிகண்டன், சங்கீதா, சரவணன், தங்கராஜ், நா்மதா, மதிமுக மாணவரணி ஈஸ்வரன், முகமது சோயப் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.