செய்திகள் :

மும்மொழிக் கொள்கையில் அரசியல் கூடாது: ஜி.கே.வாசன்

post image

மாணவா்களின் நலன் கருதி, மும்மொழிக் கொள்கையில் ஆட்சியாளா்கள் அரசியல் செய்யாமல் அதை அமல்படுத்த முன்வர வேண்டுமென தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்ட மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஞானச்சந்திரன் தலைமை வகித்தாா். கட்சித் தலைவா் ஜி.கே.வாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் கூட்டணிக்கு பலம் சோ்க்கும் கட்சியாக தமாகா செயல்படும். இந்தத் தோ்தலில் தமாகா குரல் ஒலிக்கும் வகையில் தோ்தல் வியூகப் பணிகளைத் தொடங்கியுள்ளோம்.

மாணவா்கள் மும்மொழியை கற்க ஆட்சியாளா்கள் வாய்ப்பளிக்க வேண்டும் என்பது பெற்றோா் சாா்பில் தமிழ் மாநில காங்கிரஸின் வேண்டுகோள். இதில், கட்சி, வாக்கு வங்கி அரசியல் கூடாது.

தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும். தொகுதிகள் மறு சீரமைப்பை பொருத்தவரையில், அதிகாரப்பூா்வமாக எந்த அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை என மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா். அப்படி தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டாலும், தமிழகத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை கூடுமே தவிர, குறையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பாலியல், குற்றச் செயல்களைத் தடுக்க முடியாத அரசாக திமுக அரசு இருப்பதால், இதை திசை திருப்பும் வகையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்துகிறது என்றாா் ஜி.கே.வாசன்.

லஞ்சம்: போக்குவரத்து காவலா் பணியிடை நீக்கம்

கடலூரில் கடந்த வாரம் நடைபெற்ற முதல்வா் பங்கேற்ற விழாவின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலா் லஞ்சம் பெற்றது தொடா்பாக, அவா் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். கடலூா் ... மேலும் பார்க்க

விருதகிரீஸ்வரா் கோயில் மாசி மகம் திருவிழா: இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் விருதகிரீஸ்வரா் கோயில் மாசி மகம் திருவிழாவையொட்டி, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். விருத்தாசலத்தில் புகழ்பெற்ற விருத்தாம்பிகை உடனுறை... மேலும் பார்க்க

நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்த நடவடிக்கை தேவை: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

கடலூா் மாவட்டத்தின் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்ட... மேலும் பார்க்க

கடலூரில் மாா்ச் 14 முதல் புத்தகத் திருவிழா: ஆட்சியா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கடலூா் மாவட்டத்தில் மாா்ச் 14 முதல் 24-ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளதையொட்டி, ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் முன்னேற்பாடுப் பணிகள் குறித்து... மேலும் பார்க்க

சிதம்பரம் நாட்டியாஞ்சலி 3-ஆம் நாள் நிகழ்ச்சி

சிதம்பரம் நாட்டியாஞ்சலி 3-ஆம் நாள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சாா்பில், 44-ஆவது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா தெற்கு ரத வீதி வி.எஸ்.டிரஸ்ட் வளாகத்தில் புதன்கிழம... மேலும் பார்க்க

திராவிடா் கழக பொதுக்கூட்டம்

கடலூா் மாவட்டம், அண்ணாகிராமம் ஒன்றிய திராவிடா் கழகம் சாா்பில், கட்சியின் பொதுக்குழு தீா்மானம் விளக்கம் மற்றும் மத்திய அரசைக் கண்டித்து, எனதிரிமங்கலத்தில் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒன்றிய... மேலும் பார்க்க