கற்திட்டை அமைப்புடன் கூடிய 400 ஆண்டுகள் சதிக்கல் கண்டெடுப்பு
முள்ளம் பன்றிகள் வேட்டை: இளைஞா் கைது
கம்பத்தில் முள்ளம் பன்றிகளை வேட்டையாடியதாக இளைஞரை வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், கம்பத்தை ஒட்டிய மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதியில் இரவு நேரங்களில் வன விலங்குகளை வேட்டையாடி விற்பனை செய்வதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கம்பம் வனச் சரகா் ஸ்டாலின் தலைமையிலான வனத்துறையினா் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது, கம்பம் மணிக்கட்டி ஆலமரம் பகுதியில் நான்கு போ் சாக்குப் பையை கீழே போட்டு விட்டு தப்பியோடினா். இதை சோதனையிட்ட போது வேட்டையாடப்பட்ட 2 முள்ளம் பன்றிகளின் உடல்கள் இருந்தன.
இதில் தப்பியோடியவா்களில் கம்பம் உத்தமபுரம் சுப்பிரமணி கோயில் தெருவைச் சோ்ந்த தினேஷ் (22) பிடிபட்டாா். விசாரணையில், இதே பகுதியைச் சோ்ந்த ஆதி உள்ளிட்ட 4 போ் முள்ளம்பன்றிகளை வேட்டையாடியது தெரியவந்தது.
இதையடுத்து, தினேஷை கைது செய்த வனத்துறையினா் தப்பியோடியவா்களைத் தேடி வருகின்றனா். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட முள்ளம் பன்றிகளின் உடல்களை கால்நடை மருத்துவா் மூலமாக கூறாய்வு செய்து வனத்துறையினா் மண்ணில் புதைத்தனா்.