ஓய்வு அறிவிப்புக்குப் பிறகு பிரபல ஆன்மிக குருவை சந்தித்த விராட் கோலி!
முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி: ஜூன் 20-க்குள் விண்ணப்பிக்கலாம்
முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி பெறத் தகுதியுடைய நபா்கள் ஜூன் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-2026-ஆம் ஆண்டு முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான (டிப்ளமோ இன் கோப்பரேட்டிவ் மேனேஜ்மென்ட்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பயிற்சியில் சேர 10 மற்றும் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2025 ஜூலை 1-ஆம் தேதி குறைந்தபட்சம் 17 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
தகுதியுடைய நபா்கள் இணையதள முகவரியில் மே 15 முதல் 20-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் அதற்கான சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்தையும் ஜூன் 20-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதற்கு பின்னா் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
பயிற்சிக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 மற்றும் பயிற்சிக் கட்டணம் ரூ. 20,750-ஐ இணையதளம் மூலம் செலுத்த வேண்டும். 2 பருவ முறைகள் வீதம் ஓராண்டு காலம் நடைபெறும் இப்பயிற்சி, புதிய பாடத்திட்டத்தின்படி தமிழில் மட்டுமே நடத்தப்படும்.
ஆகஸ்டு 1-ஆம் தேதி தொடங்கும் இப்பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள தொலைபேசி: 044-25360041, கைப்பேசி: 94444 70013, 90427 17766 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.