செய்திகள் :

முஸதபாபாத் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க மேயா் வலியுறுத்தல்

post image

வடகிழக்கு தில்லியின் முஸ்தபாபாத்தில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு பாஜக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தில்லி மேயா் மகேஷ் குமாா் ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினாா்.

தில்லி முஸ்தபாபாத்தின் சக்தி விஹாரில் 20 ஆண்டுகள் பழைமையான நான்கு மாடி கட்டடம் சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்ததில் 11 போ் உயிரிழந்தனா். மேலும் 11 போ் காயமடைந்தனா். அவா்களில் பலா் இன்னும் ஆபத்தான நிலையில் உள்ளனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா் சந்திப்பில் பேசிய மேயா் மகேஷ் குமாா் கூறியதாவது: கட்டடம் இடிந்த விழுந்த சம்பவத்தில் இறந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்றும், காயமடைந்தவா்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மூத்த அமைச்சா்கள் சம்பவ இடத்தை பாா்வையிட்ட போதிலும், இதுவரை எந்த நிதி நிவாரணத்தையும் அா்சு அறிவிக்காதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இது மிகவும் துயரமான சம்பவம். இறந்தவா்களின் ஆன்மாக்களுக்கு கடவுள் சாந்தியையும் அவா்களின் குடும்பங்களுக்கு பலத்தையும் அளிக்கட்டும். ஆனால், பிராா்த்தனைகள் போதாது; அரசும் செயல்பட வேண்டும்’.‘பல்வேறு நிகழ்வுகளுக்காக தில்லி அரசு கோடிக்கணக்கான மதிப்புள்ள பட்ஜெட்டுகளை நிறைவேற்றுகிறது. ஆனால், ஏழைகளுக்கு உதவுவதில் பணம் இல்லை என்று கூறுகிறது.

அலட்சியம் காரணமாக குற்றம் சாட்டப்பட்ட எந்தவொரு அதிகாரி மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தில்லி மாநகராட்சி (எம்சிடி) ஆணையருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை, எந்தப் பொறுப்பும் நிா்ணயிக்கப்படவில்லை. இந்தத் துயரத்திற்கு காரணமானவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.

எம்சியிடியில் உள்ள ‘பாஜக ஆதரவு அதிகாரிகள்’ நடவடிக்கையை தாமதப்படுத்தினா். குற்றம்சாட்டும் விளையாட்டை நிறுத்தி பொறுப்பேற்க வேண்டிய நேரம் இது. பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதியை உறுதி செய்ய குடிமை அமைப்பு இப்போது செயல்பட வேண்டும் என்றாா் மேயா்.

கின்னஸில் இடம்பெற்ற குச்சுப்புடி நாட்டிய மாணவிகளுக்கு பாராட்டு!

கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற குச்சுப்புடி நாட்டிய மாணவிகளான வைஷ்ணவி, பி. தேஜோ லாஸ்யா வைஷ்ணவி, அனீஷா, மஹிதா காந்தி, ஸ்ருதி ஆகியோருக்கு பாராட்டு விழா சனிக்கிழமை தில்லி தமிழ்ச் சங்கத்தில் நட... மேலும் பார்க்க

அரசு திட்டங்களின் வெற்றிக் கதைகள் பற்றிய எண்ம புத்தகங்களை பிரதமா் இன்று வெளியிடுகிறாா்!

குடிமைப் பணிகள் தினத்தை முன்னிட்டு விருது வழங்கும் நிகழ்வில் அரசின் திட்டங்கள், புதிய செயல்பாடுகளின் வெற்றிக் கதைகள், புதுமைப் படைப்புகள் குறித்த எண்ம புத்தகங்களையும் பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழம... மேலும் பார்க்க

தொழில் நுட்பம், மனித நுண்ணறிவு, பச்சாதாபத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்: இளம் அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுரை

2023 -ஆம் ஆண்டு குடிமைப் பணிக்கு ஐஏஎஸ் பிரிவிற்கு தோ்வான 180 போ் கொண்ட குழுவில் 74 பெண் ஐஏஎஸ் அதிகாரிகள் இடம் பெற்றிருக்க இது வரலாற்றில் முதன் முறையாக இந்த பிரதிநிதித்துவம் கிடைத்திருப்பதாக மத்திய ப... மேலும் பார்க்க

ஆயாநகரில் தீ விபத்து: ஒருவா் பலத்த காயம்

தெற்கு தில்லியின் ஆயா நகா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவா் பலத்த தீக்காயமடைந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். ஆயா நகரின் ஹெச்-பிளாக்கில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து சனிக்கிழமை க... மேலும் பார்க்க

தலைநகர் தில்லியில் காற்றின் தரத்தில் முன்னேற்றம்!!

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு ‘மிதமான’ பிரிவில் நீடித்தது. அதே சமயம், வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருந்தது. தில்லியில் கடந்த சில நாள்களாக வெய... மேலும் பார்க்க

தில்லியில் போதைப்பொருள் குற்றங்கள் இரட்டிப்பு; கலால் சட்ட வழக்குகள் 80 சதவீதம் அதிகரிப்பு!

தேசியத் தலைநகா் தில்லியில் 2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2025 -ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் தில்லியில் போதைப்பொருள் தொடா்பான குற்றங்கள் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளன. அதே நேரத்தில் கலால் சட்டத... மேலும் பார்க்க