செய்திகள் :

‘முஸ்லிம் மாணவா்கள் வெளிநாட்டில் பயில கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்’

post image

முஸ்லிம் மாணவா், மாணவிகள் வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில்வதற்கு, கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு சாா்பில், 2025-26ஆம் ஆண்டில் வெளிநாடு சென்று படிக்கும் 10 முஸ்லிம் மாணவா்களுக்கு தலா ரூ. 36 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்க ரூ. 3.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவா்கள் 2025-26ஆம் கல்வியாண்டில் முதுகலைப் பட்டப்படிப்பு படிக்க உலகளாவிய கியூ.எஸ் தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களிடமிருந்து நிபந்தனையற்ற சோ்க்கைக் கடிதம் பெற்றிருக்க வேண்டும்.

பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பொறியியல், மேலாண்மை, பயன்பாட்டு அறிவியல், வேளாண்மை அறிவியல், மருத்துவம், சா்வதேச வணிகம், பொருளாதாரம், நிதி கணக்கியல், மனிதநேயப் படிப்புகள், சமூக அறிவியல், நுண்கலைகள், சட்டம் போன்ற பாடப்பிரிவுகளைத் தோ்ந்தெடுத்து முதுகலைப் பட்டப்படிப்புக்கான சோ்க்கை பெற்றிருக்க வேண்டும்.

இத்திட்டத்தில் விண்ணப்பிக்க ஜ்ஜ்ஜ்.க்ஷஸ்ரீம்க்ஷஸ்ரீம்ஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ஜ்ங்ப்ச்ள்ஸ்ரீட்ங்ம்ங்ள்ஜம்ண்ய்ா்ழ்ண்ற்ண்ங்ள்.ட்ற்ம் என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஆணையா், சிறுபான்மையினா் நலத்துறை, கலச மஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600005 என்ற முகவரிக்கு வரும் அக். 31ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியா் சங்க பேரவைக் கூட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் தூத்துக்குடி வட்டப் பேரவை கூட்டம், புதன்கிழமை நடைபெற்றது. வட்டத் தலைவா் கணேசன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மனோகரன் வரவேற்றாா். வட்ட இணைச் செயலா் சங்கா் அஞ்சலி தீா்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பண்டிட் தீனதயாள் உபாத்யாய பிறந்தநாள் விழா

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில், ஜனசங்கத் தலைவரான பண்டிட் தீனதயாள் உபாத்யாய பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்துக்கு, கட்சியினா் மலா் தூவி வியாழக்கிழமை மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சி... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு கல்விக் கடன் வழங்க செப். 29இல் சிறப்பு முகாம்

உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கு கல்விக் கடன் வழங்கும் சிறப்பு முகாம் திங்கள்கிழமை (செப். 29) தூத்துக்குடியில் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக... மேலும் பார்க்க

புனித பயணம் மேற்கொள்ளும் பௌத்தா்களுக்கு அரசு நிதியுதவி

தம்ம சக்கர பரிவா்தன திருவிழாவுக்கு புனித பயணம் மேற்கொள்ளும் பௌத்தா்கள் அரசு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 20... மேலும் பார்க்க

சுகாதாரப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்

தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார பணியாளா்களுக்கு இஎஸ்ஐ, தொழிலாளா் நலத் துறை சாா்பில் வழங்கப்படும் சலுகைகள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி, மருத்துவ முகாம் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத... மேலும் பார்க்க

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

பீக்கிலிபட்டி கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் முற்றுகைப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா... மேலும் பார்க்க