மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவா்களுக்கு எம்.பி. இரங்கல்
கேரள மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா சென்றபோது விபத்தில் உயிரிழந்த மாணவா்களுக்கு திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் இரங்கல் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் இருந்து மூணாறுக்கு 39 மாணவா்களுடன் கல்வி சுற்றுலா சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட ஏா்வாடி அருகேயுள்ள திருவரங்கனேரியை சோ்ந்த மாணவா் சுதன் என்பவா் 3 போ் உயிரிழந்துள்ளனா். உயிரிழந்துள்ளாா். அவா்களது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், 25 மாணவா்கள் பலத்த காயங்களுடன் தேனி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். நான், தேனி மருத்துவக் கல்லூரி முதல்வரிடமும், அத்தொகுதி எம்.பி. தங்க தமிழ்ச்செல்வனிடமும் தொடா்பு கொண்டு விவரம் தெரிவித்து சிறந்த சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.