மூன்றாவது குழந்தையைத் தத்தெடுத்த ஸ்ரீலீலா!
நடிகை ஸ்ரீலீலா மீண்டும் ஒரு குழந்தையைத் தடுத்தெடுத்துள்ளார்.
அமெரிக்காவில் பிறந்த ஸ்ரீலீலா பெங்களூரில் வளர்ந்தவர். மருத்துவ படிப்பினை முடித்தவருக்கு நடனம் மற்றும் நடிப்பில் அதிக ஆர்வம் இருந்தாதால் திரைத்துறைக்கு வந்தார்.
அதற்கு முன்பாகவே 2019 இல் கன்னட படத்தில் அறிமுகமானாலும் தெலுங்கில்தான் பிரபல நடிகையாக அறியப்படுகிறார். இவர் நடித்த பகவந்த் கேசரி, குண்டூர் காரம் ஆகிய படங்கள் வெற்றிபெற்றன.
தற்போது, தமிழில் சிவகார்த்திகேயனுடன் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே, 2022 இல் இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளைத் தத்தெடுத்தார். அவர்களுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அவ்வபோது பகிர்வார்.
இந்த நிலையில், மூன்றாவதாக ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்துள்ளதை ஸ்ரீலீலா அறிவித்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டவர், “இதயத்தின் மீதான படையெடுப்புக்கு வீட்டிற்குள் மற்றொருவர்...” எனத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலீலாவின் இச்செயலுக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன் பாராட்டியும் வருகின்றனர்.
இதையும் படிக்க: பாகிஸ்தானுக்கு ஆதரவளித்தேனா? விஜய் ஆண்டனி விளக்கம்!