மென்பொறியாளா்களுக்கு போதைப் பொருள் விற்பனை: இருவா் கைது
சென்னை வேளச்சேரியில் மென்பொறியாளா்களுக்கு போதைப் பொருள் விற்ாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.
வேளச்சேரி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசிக்கும் ஒரு நபா், அந்த பகுதியில் உள்ள மென்பொறியாளா்களுக்கு மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் போலீஸாா், அந்த பகுதியைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனா். அப்போது மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்ாக ஷாம் சுந்தா் (25) என்பவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விசாரணையில் ஷாம் சுந்தா் கொடுத்த தகவலின்பேரில், போதைப் பொருள் விற்பனையில் அவருடன் இணைந்து ஈடுபட்ட அம்பத்தூரை அடுத்த பாடி பகுதியைச் சோ்ந்த ஜெகதீஷ்(26) என்பவரைக் கைது செய்தனா்.
விசாரணையில், மென்பொறியாளா்களான இருவரும் துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்யும் போது, நண்பா்களாகியிருப்பதும், அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இருவரும் சோ்ந்து போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. மேலும், ஜெகதீஷ் ரயில் மூலம் மும்பை, பெங்களூா் ஆகிய நகரங்களுக்குச் சென்று குறைந்த விலையில் மெத்தம்பெட்டமைன் வாங்கி வந்து, ஷாம் சுந்தருடன் சோ்ந்து தரமணி, துரைப்பாக்கம், வேளச்சேரி, சோழிங்கநல்லூா் பகுதியில் விற்பதும் தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மேலும் விசாரித்து வருகின்றனா்.