செய்திகள் :

``மெய்யழகன் மூலம் நான் சம்பாதித்தது இதுதான்..!" - `Birdman’ சுதர்சன் எக்ஸ்க்ளூஸிவ்

post image
மண்மனம் வீசும் கிராமத்து வெள்ளந்தி பாசம், இயற்கையான வாழ்க்கைச்சூழல், பசுமையான நினைவுகள் போன்றவற்றைக் கிளறிவிட்டு, நேசிக்கும் படமாக மாறியிருக்கிறது ‘மெய்யழகன்’.

அதேநேரம், வீட்டிலேயே ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு உணவளிக்கும் அரவிந்த்சாமியின் அருள்மொழி கதாப்பாத்திரத்தின் உண்மையான மெய்யழகன், சென்னை சிந்தாதரிப்பேட்டையைச் சேர்ந்த சுதர்சன் ஷா என சமூக வலைதளங்களில் வைரலாகிக்கொண்டிருக்க அவரிடமே பேசினேன்...

“மெய்யழகன் படத்துல என்னோட வீடும் கிளிகளும் காண்பிக்கப்பட்டதுல ரொம்ப சந்தோஷம். ஆனா, அது மூலமா பெயர், புகழ் கிடைக்கணும்னு எதிர்பார்த்து செய்யல. பறவைகள் பற்றிய நேசிப்பு மக்கள் மத்தியில இன்னும் அதிகமாகணும். அதுபற்றிய விழிப்புணர்வு வந்தாலே போதும். அதுதான் என்னோட நோக்கம். அது நிறைவேறிடுச்சு.

கிளிகளுக்கு உணவு கொடுக்கிறதை நான் 15 வருடங்களா செய்துக்கிட்டிருக்கேன். எங்கப்பாவோட இறப்பு என்னை மிக அதிகமா பாதிச்சிடுச்சு. அதுதான், பறவைகள் விலங்குகள் மீதான நேசிப்பை இன்னும் அதிகமாக்கிடுச்சு. அதனாலதான், ரொம்ப ஆத்மார்த்தமா இதை தொடரமுடியுது” என்கிறவரிடம்

"மெய்யழகன் படத்தில் அரவிந்த்சாமி உங்களது கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்தது எப்படி?” என கேட்டேன்.

சுதர்சன்ஷா

“மெய்யழகன் படத்துல உங்களை மையப்படுத்தி அரவிந்த்சாமி சார், கிளிகள் ஆர்வலரா நடிக்கிறார்-னு சொல்லி பிரேம் சாரோட டீம் என்னிடம் வந்து பேசினாங்க. அதுமட்டுமில்லாம, 2டி தரப்பிலிருந்தும் பேசினாங்க. சூர்யா சார் எனக்கு ரொம்ப பிடிக்கும். சமூக அக்கறையுள்ள மனிதர். அத்தனை ஆயிரம் ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவசக் கல்வி கொடுத்துக்கொண்டிருக்கிறார். அவங்க கேட்டு நான் மறுக்கமுடியுமா? நானும் ஓகே சொல்லிட்டேன்.

கிளிகளுக்கு உணவு கொடுக்கும் காட்சிகள் எடுக்க என்னோட வீட்டை 2 நாட்களுக்கு கேட்டாங்க. ஆனா, ஒரே நாளில் முடிச்சுட்டாங்க. அரவிந்த்சாமி சார் கிளிகளுக்கு உணவு வைக்கும் காட்சி எடுக்கும்போது கோடைகாலம். அப்படியொரு வெயில். மற்ற நடிகர்களா இருந்திருந்தா வெயில் தாங்க முடியாம, ஷாட் ஆரம்பிக்கும்போது வந்துக்கலாம்னு கேரவனுக்கு போயிருப்பாங்க. ஆனா, அவரோ கிட்டத்தட்ட, கிளிகள் வருகைக்காக 3 மணிநேரம் அந்த வெயிலில் காத்திருந்தார். அவர், படத்துக்காக இல்ல. உண்மையிலேயே கிளிகளை நேசிக்கிறார் என்பதை அதைவைத்துதான் தெரிஞ்சுக்கிட்டேன். அவர் மட்டுமல்ல, மொத்த சினிமா யூனிட்டே கிளிகளுக்காக எக்ஸைட்மெண்டோடு காத்திருந்தாங்க.

நடிகர் கார்த்தியுடன் சுதர்சன்ஷா

பொதுவா, புதிதாக இருப்பவர்களிடம் வந்து கிளிகள் உணவு ஊட்டிக்கொள்ள வரமாட்டாங்க. அதனால, அரவிந்த்சாமி சார் முன்னாடி நான் நின்னுக்கிட்டேன். அதெல்லாம், காட்சியில வராது. அதற்குப்பிறகுதான், கிளிகள் வந்தன. அவர், உணவு ஊட்டினார். அதை ரொம்ப அழகா காட்சிப்படுத்தினார்கள். ஷூட்டிங்குல ஒர்க் பன்ற டெக்னிஷியன்களும் ரொம்ப குஷியாகி செல்போனில் வீடியோ, போட்டோஸ் எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. நம்ப வீட்டுக்கு வர்றவங்க நம்ப பிள்ளைங்கள ஆசையா கொஞ்சுறதும் விளையாடுறதும் நமக்கு சந்தோஷம்தானே? அப்படித்தான், எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. படம் வெளியான பிறகு அந்தக் காட்சியை பார்க்கும்போதே ரொம்ப அழகா இருந்தது. மக்களும் ரொம்ப பாராட்டுறாங்க. ஆசையா கிளிகளைப் பார்க்க வீட்டுக்கு வர்றவங்களை யாரையுமே தடுக்கிறதில்ல. எல்லோரையுமே பார்க்க அனுமதிக்கிறேன். பார்க்க வருவதும் இலவசம்தான்” என்றவரிடம்,

``எவ்வளவு கிளிகள், பறவைகள் வந்து உணவு சாப்பிட்டுவிட்டு செல்கின்றன? உணவுக்காக ஒருநாளைக்கு எவ்வளவு செலவு ஆகுது? எப்படி சமாளிக்கிறீங்க?” என்று கேட்டபோது,

“என்னோட பூர்வீகம் கர்நாடகா. நாங்க, மராத்தி குடும்பம். பல தலைமுறைகளா சென்னையிலதான் வாழ்ந்துக்கிட்டிருக்கோம். அதனால, நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைதான். எம்.எஸ்.சி முடிச்சுட்டு அப்பாவோட பிசினஸைப் பார்த்துட்டிருக்கேன். சென்னையில முதல் எலக்ட்ரிக் கடை எங்களோடதுதான். இப்போ, நிறைய டூப்ளிகேட் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யுறாங்க. நாங்க, ஆரம்பத்திலிருந்தே தரமான, ஒரிஜினலான பொருட்களைத்தான் விற்பனை செய்துக்கிட்டு வர்றோம். அதனால, வாடிக்கையாளர்கள் மத்தியில எங்களுக்குன்னு நல்ல பேர் இருக்கு. அதுல வர்ற வருமானத்துலதான் கிளிகளுக்கு, பறவைகளுக்கு ஒருநாளைக்கு 3,000 ரூபாய்க்கு உணவு கொடுக்கிறேன். கிளிகள் அதிகமா அரிசி, வேர்க்கடலைதான் சாப்பிடுவாங்க. இதுக்காக, நான் யார்க்கிட்டேயுமே நிதியுதவின்னு கேட்கிறதில்ல. எல்லாமே என்னோட சொந்த காசை போட்டுத்தான் உணவளிச்சுக்கிட்டு வர்றேன்.

இயக்குநர் பிரேம்குமாருடன் சுதர்சன்ஷா

நான், வசிக்கிறது சொந்த வீடா இருக்கிறதால எந்த பிரச்னையும் இல்ல. கிளிகள், பறவைகள் மட்டுமில்லாம, 50 பூனைகளும் வளர்க்கிறேன். தினமும் 100 ஆடுகளும் வந்து சாப்ட்டுட்டு போகிறாங்க. இதனால, நிறைய பொருளாதார சிக்கல்கள் ஏற்படுதுதான். அதை சமாளிக்க எங்களோட செலவுகளை குறைச்சுக்கிட்டோம். உணவளிக்கிறதுக்காகவே, வெளியூர் பயணம் எல்லாம் போறதில்ல. கிளிகளும் என்னை ஒரு அப்பாவா, தோழனா பார்க்குதுங்க. இதுல, கிடைக்கிற சந்தோஷமும் மனநிறைவும் வேற எதிலேயுமே இல்ல” என்கிறவரிடம்,

"மெய்யழகன் படக்காட்சியை உங்க வீட்டுல வெச்சு எடுத்தற்கு சம்பளம் எவ்வளவு?” என்று கேட்டபோது,

“நான் இதுக்காக ஒரு ரூபாய்க்கூட வாங்கல. நீங்க ஏதாவது ஒரு தொகை வாங்கித்தான் ஆகணும். இல்லைன்னா, ஷூட்டிங்கே பண்ணமாட்டோம்னு 2டி நிறுவனம் அன்புத்தொல்லை கொடுத்தாங்க. ஆனா, அப்போதும் பணம் வாங்கிக்க நான் ஒப்புக்கல. சூர்யா சார், ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி ரெண்டு கிலோ நட்ஸ் கிஃப்ட்டா அனுப்பினார். கார்த்தி சார், அவரோட மனைவி, குழந்தைகளோடு வீட்டுக்கு வந்து என்னோட பேத்திக்கூடல்லாம் ரொம்ப ஃபிட் ஆகிட்டார். கார்த்தி சாரோட மனைவி என்னோட மனைவிக்கு ஒரு புடவை கிஃப்ட்டா கொடுத்தாங்க. என் மனைவி போட்டுக் கொடுத்த டீயை கார்த்தி சார் குடிச்சிட்டு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில்கூட இப்படியொரு டீயை குடிச்சதில்லன்னு ரொம்ப உணர்வுப்பூர்வமா பாராட்டினார். அரவிந்த்சாமி சார் எனக்கு கிளிகள் பிக்சர் உள்ள டி-சர்ட்டை பரிசா கொடுத்தார்.

மனைவி வித்யாவுடன் சுதர்சன்ஷா

இது எல்லாவற்றையும்விட இயக்குநர் பிரேம்குமார் என்னிடம் அடிக்கடி போன்ல நலம் விசாரிக்கிறார். அவரும் என்னை மாதிரியே பறவைகள், விலங்குகள் நேசிப்பாளர்தான். அவர், பையன் வளர்த்த பூனைக்குட்டியை எனக்கு பரிசளித்தார். இத்தனை மனிதர்களின் அன்பு, பாசத்தை சம்பாதித்ததைவிட பணம் சம்பாதிச்சு என்ன பண்ணப்போறேன்? அன்புதான் நான் வாங்கிய பெரிய சம்பளம். நான் யாரிடமும் எதையும் எதிர்பார்க்கல். ‘சிங்கப்பூர் சலூன்’ படத்திலேயும் இதேமாதிரி என்னோட வீட்டை காட்சிப்படுத்தினாங்க. அதுக்கும் நான் எந்தப் பணமும் வாங்கல.” என்று நெகிழ்கிறவரிடம்,

"பறவைகள், விலங்கு நல ஆர்வலரா மக்களுக்கு நீங்க வைக்கும் வேண்டுகோள்ன்னா என்ன?” என்று கேட்கும்போது,

“தயவுசெய்து பறவைகள், விலங்குகள் பாதிக்கப்படும் அளவுக்கு பட்டாசுகளை வெடிக்காதீங்க. இதுவே, பறவைகள், விலங்குகள் மீதான நேசிப்புதான்” என்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

"ரஜினி என்னை மூணு தடவை அடிச்சார்; இது நியாயமா?" - நடிகை விஜயசாந்தி அதிரடி பேட்டி

"'மன்னன்' படத்துல நான் நடிச்சப்போ ஒரு படத்துக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கினேன். இந்தியாவுல அதிக சம்பளம் வாங்கிய நடிகர்கள்ல அமிதாப் பச்சன் சார் முதலிடத்துலயும், ரஜினி சார் இரண்டாவது இடத்துலயும், ந... மேலும் பார்க்க

`ஜான்சி ராணி, நேதாஜி, சாவர்கர்' புதிய அவதாரத்தில் மீண்டும் சக்திமான் - முகேஷ் கண்ணா அறிவிப்பு!

சக்திமான்... 90-களில் பிறந்தவர்களுக்கு மறக்கமுடியாத தொடர்களில் ஒன்று. சக்திமான கதாபாத்திரத்தில் நடிகர் முகேஷ் கண்ணா நடித்திருப்பார். அந்தத் தொடர் மீண்டும் வெளியாக இருப்பதாக நடிகர் முகேஷ் கண்ணா தெரிவித... மேலும் பார்க்க

2025 கிராமி விருதுகளில் அதிக பிரிவுகளில் நாமினேஷன் ஆன கலைஞர்கள் - யார் யார்?

துரைத்துறையில் கொடுக்கப்படும் ஆஸ்கார் விருதுக்கு நிகரானது, இசை துறையை சார்ந்தவர்களுக்கு கொடுக்கப்படும் `கிராமி விருதுகள்’. 2025 ஆம் ஆண்டுக்கான கிராமி விருதுகளுக்கான நாமினேஷன் பட்டியலை தற்போது அறிவித்த... மேலும் பார்க்க

Delhi Ganesh: ``மரணம் வரும்னு தெரியும், எப்போன்னு தெரியாதவரை நாம ராஜா'' -டெல்லி கணேஷ் நாஸ்டால்ஜியா!

டெல்லி கணேஷ் எனும் ஓர் அற்புதமான நடிகரை திரைத்துறையும் ரசிகர்களும் இழந்து நிற்கிறார்கள். அவருடன் பணியாற்றிய பலரும் அவர் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், இரண்டு வருடங்களுக்க... மேலும் பார்க்க

Delhi Ganesh : 'அற்புதமான மனிதர், நல்ல நடிகர்...' - ரஜினி, விஜய் டு அண்ணாமலை... இரங்கல் பதிவுகள்!

நடிகர் டெல்லி கணேஷ் மறைவிற்கு திரையுலகத்தை சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள் என பலர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவருடைய மரணம் குறித்து எக்ஸ் தளத்தில் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் பதிவிட்டிரு... மேலும் பார்க்க

Delhi Ganesh `சத்யா அவள் தாத்தாவை மிஸ் செய்வாள்'- ஆடுகளம் தொடர் நாயகி டெல்லி கணேஷ் மறைவுக்கு இரங்கல்

நடிகர் டெல்லி கணேஷின் மறைவு, பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் ‘ஆடுகளம்’ தொடரில் நடிகர் டெல்லி கணேஷ் நடித்துக் கொண்டிருந்தார். அந்தத் தொடரின் ப்ரொமோ சமீபத்தில் வெளிய... மேலும் பார்க்க